வீடியோ கால் டூ டேட்டிங் ரேட் நடிகையாக கிரண் மாறியதன் பின்னனி!

by Rohini |   ( Updated:2023-06-11 03:10:09  )
kiran
X

kiran

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக இருந்தார் நடிகை கிரண். ஜெமினி படத்தின் மூலம் ஒரு சேட் பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். அந்தப் படத்திற்குப் பிறகு அவருக்கு தொடர்ந்து ஏராளமான படங்கள் வந்து குவிந்தன. அதுவும் அவர் நடித்த படங்கள் எல்லாம் முன்னணி நடிகர்கள் நடித்திருந்த படங்களாகவே அமைந்தன.

குறுகிய காலத்தில் டாப் நடிகை

பிரசாந்த் உடன் வின்னர் அஜித்துடன் வில்லன் கமலுடன் அன்பே சிவம் போன்ற முக்கியமான படங்கள் அவரின் சினிமா வாழ்க்கையை மாற்றியது. இந்த அளவுக்கு ஒரு முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்ற கிரண் ஒரு கட்டத்திற்கு மேலாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தார்.

kiran1

kiran1

அதன் பிறகு விஜய் நடித்த திருமலை படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாட கிரணிடம் வாய்ப்பு கேட்டார்கள். ஆனால் முதலில் மறுத்த கிரண் பிறகு சம்பளமாக ஒரு பெரிய தொகையை கொடுத்து புக் செய்தார்கள். அந்தப் பாடல் மிகவும் பிரபலமானாலும் அதன் பிறகாவது கிரனுக்கு வாய்ப்பு வந்ததா என்றால் இல்லை. அதனை எடுத்து ஐட்டம் பாடலுக்கு மட்டுமே அவருக்கு வாய்ப்புகள் வந்து குவிந்தன.

இணையத்தின் ராணி ஆனார்

ஆனால் அதை மறுத்தார் கிரண். அதன் பிறகு சிறிது நாட்கள் வாய்ப்புகளே இல்லாமல் இருந்த கிரண் திடீரென இணையத்தில் மிகவும் வைரலானார். முகம் சுளிக்கும் மாதிரியான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரின் அதிருப்திக்கும் ஆளானார். கொஞ்சம் உச்சகட்டமாக புகைப்படங்களை பார்த்தால் இவ்வளவு ரூபாய் வீடியோ பார்த்தால் இவ்வளவு ரூபாய் என்னுடன் டேட்டிங் செய்தால் இவ்வளவு தொகை ஒருநாள் டின்னர் சாப்பிட இவ்வளவு தொகை என ஒரு ஆன்லைன் விபச்சாரமாகவே செய்ய ஆரம்பித்திருக்கிறார் என்று பிரபல பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு கூறினார்.

kiran2

kiran2

இதற்குப் பின்னணியில் காரணமாக இருப்பது எப்பவும் ட்ரெண்டிங்காக இருக்க வேண்டும் என்பதற்காகவும் தன்னுடைய பெயரை ரசிகர்கள் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகவும் தான் கிரண் இவ்வாறெல்லாம் செய்கிறார் என்று செய்யாறு பாலு கூறினார். ஆனால் இப்பவும் அவர் சினிமாவிற்கு வந்தால் அவருக்காக கேரக்டர் கதாபாத்திரங்கள் நிறையவே காத்துக் கொண்டிருக்கின்றன. அதையெல்லாம் விட்டுவிட்டு இப்படி ஒரு மோசமான செயலை செய்வது மிகவும் அபத்தமானது என்றும் செய்யாறு பாலு கூறினார்.

Next Story