அப்பா இறப்பிற்கு கூட போகாத கோவை சரளா! கெட்டதுலயும் ஒரு நல்லது.. ஏன்னு தெரியுமா?

Actress Kovai Sarala: தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களின் ஆதிக்கம் மிகக் குறைவே. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சில நடிகர்கள் மட்டுமே நகைச்சுவையில் சிறந்து விளங்கினர். அதுவும் நடிகைகளில் நகைச்சுவை நடிகைகளை காண்பது மிகவும் அரிது.
அந்த காலத்தில் மனோரமா நகைச்சுவையில் மிக உச்சத்தில் இருந்தார். அதே பெருமையை இந்த காலகட்டத்தில் நடிகை கோவை சரளா அடைந்திருக்கிறார். தமிழ், தெலுங்கு ,மலையாளம், கன்னடம் போன்ற பழமொழிகளில் கோவை சரளா கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் .
இதையும் படிங்க: கவின் மட்டுமல்ல.. விஜயுடனும் நடிக்கும் சிவகார்த்திகேயன்!.. எவ்வளவு சைலைண்டா இருந்திருக்காங்க!…
ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது நடிக்க வந்த கோவை சரளா தனது பத்தாம் வகுப்பு படித்த நேரத்தில்தான் மூன்று முடிச்சு என்ற திரைப்படத்தில் 32 வயது கர்ப்பிணி பெண்ணாக நடித்து பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
இப்படி கமலுடன் சதிலீலாவதி,வடிவேலுவுடன் விரலுகேத்த வீக்கம் போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இன்று நகைச்சுவையில் பெரும் சாதனை படைத்த நடிகையாக திகழ்ந்திருக்கிறார்.
இதையும் படிங்க: பிரசாந்த் பட டைட்டிலை சுட்ட கவின்!.. தயாரிப்பாளருக்கு ஒத்த பைசா கூட தரலையாம்?..
இந்த நிலையில் அவர் அப்பா இறப்பிற்கு கூட போக முடியாமல் இருந்த சம்பவத்தை பற்றி சமீபத்திய ஒரு பேட்டியில் கோவை சரளா கூறியிருக்கிறார். அந்த நேரத்தில் ஊட்டியில் ஓரு படப்பிடிப்பில் இருந்தாராம் கோவை சரளா. அப்போது அவர் சின்ன பட்ஜெட் படத்தில் நடித்துக் கொண்டிருந்தாராம்.
அந்த நேரத்தில் அவர் அவரின் அப்பா இறப்பிற்கு வந்தால் இவரால் அந்த தயாரிப்பாளர் நஷ்டம் அடைவார் என்ற காரணத்தினால் அவர் அப்பா இறப்பிற்கு கூட வர முடியாமல் அங்கேயே இருந்து விட்டாராம். ஆனால் பணத்திற்காக தான் கோவை சரளா அப்பா இறப்பிற்கு கூட வராமல் இருந்து விட்டார் என்று பத்திரிகைகளில் செய்திகள் அப்பொழுது வெளி வந்தன என அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: த்ரிஷ்யம் இயக்குனர் படத்தில் அமலா பால்!.. ஆடு ஜீவிதம் படத்துக்கு அடுத்து இன்னொரு ஜாக்பாட்டா?..