தொட மாட்டேன்.. கட்டிப்புடிக்க மாட்டேன்!.. வடிவேலுவுடன் நடிக்க கண்டிஷன் போட்ட கோவை சரளா..

by sankaran v |
Vadivelu, Kovai sarala
X

Vadivelu, Kovai sarala

வரவு எட்டணா செலவு பத்தனா படத்தில் வைகைப்புயல் வடிவேலு, கோவை சரளா, கவுண்டமணி, செந்தில் என்று பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்கியவர் வி.சேகர். இது குடும்பப்படம் தான் இருந்தாலும் காமெடி பட்டையைக் கிளப்பும். இந்தப் படத்தின்போது நடந்த சில சுவையான சம்பவங்களை இயக்குனர் வி.சேகர் சொல்கிறார். பார்ப்போமா...

இந்தப் படத்தில் கோவை சரளாவுக்கு ஜோடியாக வடிவேலுவைப் போட்டதும் அவர் நடிக்கத் தயங்கினார். சார் நீங்களே என்னை வளர்த்து விட்டீங்க. இப்போ இவரு கூட எல்லாம் ஜோடியா போட்டு இப்படி காலி பண்றீங்களேன்னு கேட்டாங்க. அப்போ வடிவேலு ஒரு சில படங்களில் தான் நடித்திருந்தார். இது அப்படி இல்லம்மா... அவன் நடிப்பை நான் பார்த்துருக்கேன். அவன் வருங்காலத்துல பெரிய நடிகனா வருவான்.

Varavu ettana selavu pathana

Varavu ettana selavu pathana

அவன் கூட நீ ஜோடி சேர்ந்தா அது புதுசா இருக்கும்னு சொல்லி சமாதானப்படுத்தினேன். அப்போ கவுண்டமணி, செந்தில் எல்லாம் உனக்கு ஜோடியா வேற ஆளே கிடைக்கலயா... அவன் கூட எல்லாம் போய் நடிக்க. இனி நீ திரும்பவும் கோயம்புத்தூருக்கே போயிட வேண்டியது தான். அங்கே போயி டிராமா ஏதாவது நடின்னு சொன்னார். இப்படி கேலி பண்ணியதும் நான் கவுண்டமணியிடம் எடுத்துச் சொன்னேன்.

நீங்க எல்லாம் ஒரே நடிகை கூடத் தான் ஜோடியா நடிப்பீங்களா... வேற வேற நடிகைகள் நடிக்கறது இல்லையா... அவங்க ஜோடி புதுசா இருக்கட்டுமேன்னு தான் போட்டுருக்கேன். இது நல்லா வரும்கற நம்பிக்கை இருக்குன்னு சொல்லி அவர்களையும் சமாதானம் செய்தேன்.

இதையும் படிங்க...இளையராஜா இசைல நாம மயங்கி கிடக்குற ரகசியம் தெரியுமா!. அவருக்காகவே பொறந்தவரு இவருதான்!..

அப்புறம் கோவை சரளா சரி சரி நடிக்கிறேன். ஆனா அவரு என்னைத் தொடக்கூடாது. கட்டிப்பிடிக்கக் கூடாதுன்னு சொன்னாங்க. கட்டிப்பிடிக்காம, தொடாம எல்லாம் நடிக்க முடியுமான்னு கேட்டேன். அப்புறம் பேலன்ஸ் பண்ணி 15 சீன் வரை நடிக்க வச்சேன். இந்தப் படத்துக்கு வடிவேலுவுக்கு 10 ஆயிரம் சம்பளம் கொடுத்தேன். வேண்டாம் சார் எனக்கு கேரக்டர் கொடுத்தா போதும்னு சொன்னான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1994ல் வி.சேகர் இயக்கிய வரவு எட்டணா செலவு பத்தணா படத்திற்கு தாய்மார்களின் ஆதரவு அதிகமாக இருந்தது. நாசர், ராதிகா, ஜெய்சங்கர், கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, வடிவேலு. விணுசக்கரவர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். சந்திரபோஸ் இசை அமைத்துள்ளார்.

Next Story