குஷ்பூ இட்லினு பேர் வர்றதுக்கு காரணமே இந்த நடிகர்தானாம்.. நீண்ட நாள் ரகசியத்தை பகிர்ந்த குஷ்பூ

kush
Actress Kushboo: 90 காலகட்டத்தில் தன்னுடைய நடிப்பாலும் அழகாலும் நடனத்தாலும் அனைவரையும் கட்டி போட்டு வைத்தவர் நடிகை குஷ்பு .அந்த காலத்தில் ஒரு கனவு கன்னியாகவே வலம் வந்தார். முதன் முதலில் ஹிந்தியில் தான் அவருடைய சினிமா கெரியர் ஆரம்பமானது. அதுவும் குழந்தை நட்சத்திரமாக ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
அதன் பிறகு தெலுங்கு, தமிழ் என தென்னிந்திய சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தார். சமீபத்தில் அவர் ஒரு தனியார் youtube சேனலுக்கு பேட்டி அளித்த போது ஏராளமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அவருடைய அப்பாவை பொறுத்த வரைக்கும் காசு காசு எல்லாமே காசு தான் என்ற எண்ணத்தில் இருப்பவராம்.
இதையும் படிங்க: வளர்ப்பு மகனால் வந்த குடைச்சல்.. வீட்டோட மாப்பிள்ளை! ஜெயம் ரவி – ஆர்த்திக்கு என்னதான் நடந்தது?
நல்ல படமா கெட்ட படமா என்பதெல்லாம் தெரியாமல் காசுக்காக அவருடைய அப்பா எல்லா படங்களிலும் நடிக்க வைத்தாராம். அதனால் அவருடைய மார்க்கெட் கொஞ்சம் குறைய ஆரம்பித்து இருக்கிறது. இதனால் அவருக்கும் அவருடைய அப்பாவுக்கும் இடையே பல தடவை சண்டையும் வந்ததாக சொல்லி இருக்கிறார் குஷ்பூ. தமிழில் தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமான குஷ்பு இந்த படத்தில் நடிக்கும் போது முதலில் தமிழை தெரியாமல் தான் இருந்தாராம்.
அதனால் செட்டில் என்ன பேசுகிறார்கள் என்று கூட தெரியாமல் இருந்திருக்கிறார். அதில் லைட் மேன் டெக்னீசியங்கள் அனைவரும் வாடா போடா என பேசிக்கொண்டு இருப்பதை பார்த்த குஷ்பூ இது மரியாதை காரணமாக கூப்பிடுகிறார்கள் போல என நினைத்து ஒரு சமயம் ரஜினியை போடா என சொன்னாராம். உடனே பிரபு ஓடி வந்து இப்படி எல்லாம் பேசக்கூடாது என சத்தம் போட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: தெறி மாஸ் லுக்கில் அஜித்குமார்!.. வெளியான குட் பேட் அக்லி செகண்ட் லுக் போஸ்டர்!…
அதற்கு குஷ்பூ எல்லாரும் அப்படித்தானே பேசுகிறார்கள் என சொல்ல ‘அவர்கள் பேசுவார்கள் ரஜினியை நீ இந்த மாதிரி பேசக்கூடாது’ என சத்தம் போட்டாராம். அதன் பிறகு குஷ்புவின் கன்னத்தை கிள்ளி ‘ நல்லா இட்லி மாதிரி இருக்க’ என பிரபு சொன்னாராம். அதிலிருந்து ஆரம்பித்தது தான் குஷ்பூ இட்லி என அந்த பேட்டியில் கூறினார்.