Categories: Entertainment News

20 வயசு குறைஞ்சி போச்சி!…வேற லெவல் லுக்கில் நடிகை குஷ்பு…

தமிழில் பல திரைப்படங்களில் நடித்தவர் குஷ்பு. 90-களில் பலரின் கனவு கன்னியாக இருந்தவர். இவருக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய சம்பவம் கூட தமிழகத்தில் நடந்தது. 90களில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர்.

kushboo

ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, சத்தியராஜ் என அப்போதையை முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்தவர். குறிப்பாக பிரபுவுடன் இவர் நடித்த திரைப்படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து ஹிட் ஆனது.

கதாநாயகி இடத்திலிருந்து ரிட்டயர்டு ஆகும் போது அரசியலில் இறங்கினார். திமுகவில் இணைந்த அவர் அதன்பின் அக்கட்சியிலிருந்து வெளியேறி காங்கிரஸில் இணைந்தார். எந்த பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தாரோ அதிலேயே தன்னை இணைத்துக்கொண்டார்.

ஒருபக்கம் சீரியலில் நடிப்பது, தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிவது என பிஸியாக இருந்து வருகிறார்.

மேலும், தனது உடலை உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு மூலம் குறைத்து 90களில் இருந்த அழகுக்கு தற்போது திரும்பியுள்ளார். அவ்வப்போது தனது புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா