ரஜினியை மரியாதை இல்லாமல் ‘வாடா’ என அழைத்த அறிமுக நடிகை!.. பதட்டமான படப்பிடிப்பு!..

நடிகர் எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு பின் திரையுலகில் மிகவும் கெத்தாக வலம் வருபவர் சூப்பர்ஸ்டார். துவக்கத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர். இவரை மக்களிடம் பிரபலப்படுத்தியதில் பாலச்சந்தருக்கு பெரிய பங்குண்டு. ஆனால், ரஜினியை ஒரு ஜனகரஞ்சகமான கதாநாயகனாக மாற்றியது.
கமலுக்கு நண்பனாக மட்டுமே தொடர்ந்து நடித்து வந்தவர் பைரவி திரைப்படம் மூலம் ஹீரோவாக மாறினார். ரஜினியின் நடிப்பில் வெளிவந்த படங்கள் வசூலில் சக்கை போட்டு போட சூப்பர்ஸ்டாராகவும் மாறினார். ரஜினி நடித்தாலே படம் ஹிட் என்பதால் அவரை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்களிடையே போட்டியே நிலவியது.
இதையும் படிங்க: அந்த பயம் வந்துடுச்சு போல!.. வேட்டையன் படத்தோட கிளாஷ் விடாத விஜய்.. வம்பிழுத்த ரஜினி ரசிகர்!..
80 முதல் இப்போது வரை சுமார் 40 வருடங்களுக்கும் மேல் தமிழ் திரையுலகில் நம்பர் ஒன் இடத்தை கையில் வைத்திருக்கிறார். அவரின் இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை. சம்பளத்தில் வேண்டுமானால் ரஜினியை விஜய் தாண்டலாம். ஆனால், ரஜினி படத்திற்கான வரவேற்பு, எதிர்பார்ப்பு, அவரின் படங்களின் ரீச் இதை எந்த நடிகராலும் முறியடிக்க முடியவில்லை.
இந்த வயதில் கூட ஜெயிலர் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துவிட்டு வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் முடிவடைகிறது. இந்த படம் முடிந்ததும் அடுத்து பலரும் எதிர்பார்க்கும் காம்போவாக லோகேஷ் கனகாராஜின் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார்.
இந்நிலையில், ரஜினியை பார்த்து ‘வாடா’ என சொன்ன நடிகையை பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம். மும்பையிலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்தவர் குஷ்பு. நடிக்க வந்த புதியில் இவருக்கு ஹிந்தியும், ஆங்கிலமும் மட்டுமே தெரியும். தர்மத்தின் தலைவன் படத்தில் ரஜினியுடன் சில காட்சிகளில் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: தலைவர் பன்ச்சை விட இதுதான் ஃபேமஸ்.. ஒரே ஒரு டையலாக்கால் ரஜினியை மடக்கிய நிழல்கள் ரவி
அப்போது சிலர் ‘உனக்கு தமிழ் சொல்லி கொடுக்கிறேன்’ என சொல்லி குட்மார்னிங் சொல்ல ‘வாடா’ என சொல்ல வேண்டும் என சொல்லிவிட்டனர். அடுத்தநாள், படப்பிடிப்பு தளத்திற்கு ரஜினி வந்ததும் அவரை பார்த்து ‘வாடா’ என சொல்லி இருக்கிறார் குஷ்பு. அவர் அப்படி சொன்னதும் படப்பிடிப்பில் இருந்தவர்கள் பதறிபோய்விட்டார்கள்.
பிரபு அவரிடம் சென்று ‘எதற்காக ரஜினி சாரை வாடா என சொன்னாய்?’ என கேட்ட பின்புதான் அவருக்கும் என்ன நடந்தது என்பது புரிந்தது. அதன்பின், சில தமிழ் வார்த்தைகளை அவருக்கு பிரபு சொல்லி கொடுத்திருக்கிறார். குஷ்பு அப்படி சொன்னதும் விஷயத்தை புரிந்துகொண்ட ரஜினி கோபப்படாமல் சிரித்துக்கொண்டே போய்விட்டாராம். பின்னாளில் பாண்டியன், மன்னன், அண்ணாமலை போன்ற படங்களில் குஷ்புவுடன் ரஜினி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.