Connect with us
laila

Cinema News

வாம்மா செல்லம்!…உனக்குதான் வெயிட்டிங்!…மீண்டும் நடிக்க வரும் லைலா…

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்தவர் நடிகை லைலா. விஜயகாந்த் நடித்த கள்ளழகர் திரைப்படத்தில்தான் லைலா அறிமுகமானார்.

அதன்பின் முதல்வன், பார்த்தேன் ரசித்தேன், தீனா, தில், உன்னை நினைத்து, உள்ளம் கேட்குமே, பிதாமகன் என பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். குழந்தை போல் பேசும் அவரின் அழகில் ரசிகர்கள் சொக்கிப்போயினர். கடைசியாக அஜித் நடித்த திருப்பதி படத்தில் நடித்திருந்தார்.

திடீரென திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆனார். திருமணத்திற்கு பின் அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. இரண்டு குழந்தைகளுக்கும் தாயானார். அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், 16 வருடங்களுக்கு பின் அவர் கார்த்தி நடித்து வரும் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இரும்புத்திரை மற்றும் ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top