தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த நடிகை!.. மீண்டும் பார்க்க முடியுமா?.. அந்த செயலை செய்வார்களா இயக்குனர்கள்?..

by Rohini |
lakshmi_main_cine
X

lakshmi

பொதுவாகவே நட்சத்திர குடும்பத்தில் இருந்து வந்தவர் நடிகை லட்சுமி. அவரின் பெற்றோர்கள் இருவருமே திரைத்துறையில் பணியாற்றியதால் லட்சுமிக்கும் சினிமாவில் நுழைய மிகவும் எளிதாகவே இருந்தது. இயக்குனர் மல்லியம் ராஜகோபால் தான் லட்சுமியை முதன் முதலில் சினிமாவில் அறிமுகம் செய்தார்.

1968 ஆம் ஆண்டு வெளியான ஜீவனாம்சம் படத்தின் மூலம் அறிமுகமானார் லட்சுமி. 1970 ஆம் ஆண்டு வெற்றி நடிகையாக வலம் வந்தார். சிறந்த நடிகைக்கான பிலிம் ஃபேர் விருதுகளை பெற்றுள்ளார். மேலும் சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை தட்டி சென்றார்.

laskhmi1_cine

lakshmi

1980 களில் இவர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிப்பது குறைந்ததால் துணை நடிகையாகவும் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் இவருக்கு ஜீன்ஸ் திரைப்படம் மிக வரவேற்பை தேடி தந்தது. மேலும் சின்னத்திரையிலும் அரட்டைக்காட்சி நிகழ்ச்சியையும் நடத்தினார்.

இதையும் படிங்க : தளபதி 67 படத்தில் வில்லன் வேடம்…நடிக்க மறுத்த பிரபல நடிகர்…இதுதான் காரணமா?…

படையப்பா, வேல் போன்ற வெற்றிப்படங்களில் நடித்து மீண்டும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வந்தார் நடிகை லட்சுமி. வயது வித்தியாசம் பார்க்காமல் தனக்கு ஏற்ற கதாபாத்திரம் அமைந்தால் அதில் நிச்சயம் முத்திரையை பதிக்க கூடிய ஆகச்சிறந்த நடிகையாக விளங்குபவர்.

lash2_cine

lakshmi

சமீபத்தில் கூட சினிமாவில் லட்சுமியை பார்க்க முடியவில்லை என்பதால் அவர் இறந்து விட்டதாக சில வதந்திகள் பரவியது. அந்த வதந்தியை பொய்யாக்கும் விதத்தில் அவரே பேசிய ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதுவும் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் அவரது ரசிகர்கள் ஏன் லட்சுமியை திரையில் காணமுடியவில்லையே என்று கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக சித்ரா லட்சுமணன் இப்ப உள்ள திரைப்படங்களை பார்த்தாலே தெரியும், அதில் வரும் கதாபாத்திரங்களுக்கு கொஞ்சம் கூட லட்சுமி பொருத்தமாக இருக்கமாட்டார் எனவும் படங்களில் அவரை நடிக்க வைக்க வேண்டும் என கருதி நடிக்க வைத்தால் அது சரியாக இருக்காது எனவும் அவருக்கே ஏற்ற முறையில் கதையை இயக்குனர்கள் அமைக்க வேண்டும். அதில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்திக் காட்டுபவர் தான் லட்சுமி என்று கூறினார்.

lash3_Cine

lakshmi

Next Story