Cinema History
கடைசி நேரத்தில் எஸ்பிபி போட்ட கண்டிஷன்!.. கண் கலங்கிய லட்சுமி.. இப்படியொரு கெமிஸ்ட்ரியா?..
பழம்பெரும் நடிகை லட்சுமி சமீபத்தில் குட்டி பத்மினியுடன் யூடியூப் சேனல் ஒன்றில் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. நடிகையர் திலகம் சாவித்ரி பற்றியும் பாடு நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம் பற்றியும் ஏகப்பட்ட விஷயங்களை நடிகை லட்சுமி தனது பேட்டியில் பேசியுள்ளார்.
சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் நடிக்கும் போது கண்ணீர் விட்டு அழும் காட்சியில், தனக்கு முன்னாடி வந்து நின்றுக் கொண்டு நாகேஷ் சிரிப்புக் காட்டுவார் என்றும் ஒரே கத்தாக கத்துவேன். உடனே இயக்குநர் என்ன என கேட்டதும், இவரு பாருங்க சார் சிரிப்புக் காட்டுகிறார் என்பேன் என நாகேஷ் பற்றி பேசி பேட்டியை ஆரம்பித்த நடிகை லட்சுமி தனது பல வருட சினிமா அனுபவத்தையும் தான் சந்தித்த துயரங்களையும் பேரிடர்கள் குறித்தும் செம கேஷுவலாக சொல்ல சொல்ல ரசிகர்கள் அவரது பேச்சில் அப்படியே தலையாட்டி பொம்மை போல ஆகிடுவார்கள் போல இருக்கிறது.
சாவித்ரி அம்மா வீட்டு கொலு:
நடிகையர் திலகம் சாவித்ரி வீட்டில் நடைபெற்ற நவராத்திரி கொலு குறித்து ஆச்சர்யமூட்டும் பல தகவல்களை சொல்லியுள்ளார் நடிகை லட்சுமி. தங்க பேழை வைத்து கொலு பூஜையில் வைக்கப்படும் பூஜை சமான்கள் அனைத்துமே தங்கத்தில் ஜொலிக்குமாம்.
இதையும் படிங்க: எத்தன பேர் வந்தாலும் நீதான் டாப்பு!.. வேறலெவல் லுக்கில் சுண்டி இழுக்கும் பிரியங்கா மோகன்!..
தங்க பேனா, தங்க சந்தனக் கின்னம், தங்கத்தில் குங்கமச்சிமிழ் என அப்படியே மின்னும். நான் எங்கம்மாக்கிட்ட நம்ம வீட்ல மட்டும் ஏன்மா வெள்ளியில இருக்கு, அவங்க வீட்ல தங்கத்துல இருக்குன்னு கேட்டுட்டேன், எங்கம்மா சும்மா இருன்னு அதட்டினாங்க.. அவங்களோட கடைசி நேரத்துல இதெல்லாம் அப்படியே ஃபிளாஷ்பேக் மாதிரி எனக்கு வந்துட்டு போச்சு, வாழ்க்கை இவ்ளோ தானான்னு தோணுச்சு என்றார்.
கடைசி நேரத்தில் பாலு போட்ட கண்டிஷன்:
எஸ்.பி. பாலசுப்ரமணியம் பற்றி லட்சுமிக்கு குட்டி பத்மினி நினைவுப்படுத்த, அவர் பற்றி ஞாபகப்படுத்தாத அழுதுடுவேன்னு சொன்ன லட்சுமி பாலுவுடன் தான் நான் நிறைய படங்களில் நடிச்சிருக்கேன். தமிழில் ஒரு சில படங்களில் நடித்தோம், ஆனால் அவை ரிலீஸ் ஆகவில்லை. தெலுங்கு மற்றும் கன்னடத்தில் நிறைய படங்கள் பண்ணியிருக்கோம்.
அப்படியொரு கெமிஸ்ட்ரி எங்க ரெண்டு பேருக்கும். கடைசி நேரத்தில் அவர் மருத்துவமனையில் இருக்கிறார் என தெரிந்ததும் நான் வந்து பார்க்குறேன்னு போன் பண்ணேன். “ஒத்து”.. மருத்துவமனைக்கு எல்லாம் வராதே.. நான் நல்லாகிடுவேன், வந்து உன்னை பார்க்குறேன்னு சொன்னார்.
அவருக்கு மத்தவங்க யாருமே கஷ்டப்பட்டுடக் கூடாதுங்குற நினைப்பு எப்போதுமே இருக்கும். அதனால், தான் என்னை திட்டி வரவேண்டாம்னு சொன்னார் என எஸ்பிபியின் கடைசி நேர நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார் லட்சுமி.
இதையும் படிங்க: போயும் போய் இந்தப் படத்தை எடுத்தா எங்க நிலைமை என்ன ஆகுறது? கமல் படத்திற்கு வந்த சிக்கல்