Cinema News
அஜித், விஜய்க்கு முந்தைய கால நடிகர்கள் ஒழுக்கமானவர்களா? புது பிரச்சினையை கிளப்பிய நடிகை
Actress Lakshmi ramakrishnan: மலையாள சினிமாவில் இப்போது பாலியல் கொடுமை பற்றிய பிரச்சனை பூதாகரமாக மாறியதை அடுத்து தமிழ் சினிமாவில் இருக்கும் பிரபலங்களும் அதற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். அதில் விஷால் ‘மலையாள சினிமாவில் எப்படி ஒரு ஹேமா கமிட்டி இருக்கிறதோ அதைப்போல இங்கும் கொண்டுவரப்படும்’ எனக் கூறியிருக்கிறார்.
அதைப் பற்றி பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது ‘முதலில் நடிகர் சங்கத்தை முறையாக நடத்தச் சொல்லுங்கள். ஏதாவது பிரச்சனை என்றால் ஒரு நடிகையாக நடிகர் சங்கத்திற்குள் போகவே பயமாக இருக்கிறது. சங்கத்திற்குள் என்ன மாதிரியான பாலிடிக்ஸ் நடக்கிறது என்றே தெரியவில்லை. இதுதானே இப்போது மலையாளத்தில் அம்மா நடிகர் சங்கத்திலும் நடந்தது.
இதையும் படிங்க: மலையாள சினிமாவில் நடக்கும் பிரச்சினைக்கு விக்டிமே நான்தான்.. சரவெடியாக மாறிய ஷகீலா
நீ என் முதுகை சொரிஞ்சு விடு. நான் உன் முதுகை சொரிஞ்சு விடுகிறேன். என்ன பற்றி வெளியில் சொல்லாதே. உன்னைப் பற்றியும் நான் வெளியில் சொல்ல மாட்டேன் என்பது மாதிரியான ஒரு விஷயம் அங்கு நடந்து கொண்டிருக்கின்றது. தமிழில் ஒரு நடிகைக்கு பிரச்சனை என்றால் நடிகர் சங்கத்தில் போய் புகார் கொடுக்கும் மாதிரியான ஒரு சூழல் இருக்கிறதா?
வெளியில் இருந்து பார்க்கும் பொழுது இரண்டு குரூப் ஆக இருப்பதைப் போல் தெரிகிறது. அவர்களுக்குள்ளாகவே கிளாசும் நடந்து கொண்டிருக்கின்றது. யார் உண்மை யாரு பொய் என்றே நமக்கு தெரியவில்லை’ எனக் கூறியிருக்கிறார் . அது மட்டுமல்லாமல் பெண்கள் விஷயத்தில் அஜித் விஜய்க்கு முந்தைய கால நடிகர்கள் ஒழுக்கமானவர்களா என்பது மாதிரியும் கேள்வி கேட்டிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
இதையும் படிங்க: கோட் படம் விஜயிற்காக எழுதியது இல்லை.. இந்த நடிகருக்குதான் எழுதியதாம்…
அவர் பேசும் போது ‘என் அதிகாரம், என்னுடைய பதவி பணம் இவற்றை பயன்படுத்தி படத்தில் நடிக்க வைக்க நடிகைகளிடம் சுரண்டலை பண்ணுவதே இல்லை என தைரியமாக சொல்லும் நடிகர்கள் இடத்தில் கார்த்திக் இருக்கிறார். சூர்யா இருக்கிறார். சிவகார்த்திகேயன் இருக்கிறார். அருள்நிதி இருக்கிறார். விஜய் அஜித் போன்றவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் இவர்களுக்கு முந்தைய தலைமுறை நடிகர்கள் இருப்பார்களா என்றால் இல்லை. நான் சொல்வது ரிலேஷன்ஷிப் பற்றி இல்லை. இந்த நடிகர்கள் அல்லது நடிகைகளை செக்ஸுவல் ஃபேவர் பண்ணினால்தான் இவர்களை நடிக்க விடுவேன் என நான் மேல் சொன்ன அந்த நடிகர்களை பற்றி யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.
இதையும் படிங்க: அஜித் மேல் இப்போ வரைக்கும் கோபம் இருக்கு! என்ன லைலா இப்படி சொல்லிட்டாங்க?
ஆனால் அதற்கு முந்தைய தலைமுறை நடிகர்கள் விஷயத்தில் அந்த மாதிரி நடந்திருக்கிறது. இப்பொழுது கூட பிருத்திவிராஜ் பெண்களுக்கு சப்போர்ட்டாக குரல் கொடுத்திருக்கிறார். அது இளம் தலைமுறை நடிகர். அதே போல் ஹிந்தியில் அமீர்கான் இப்போது வாய்ஸ் கொடுத்திருக்கிறார். அதாவது பெண்களை தவறாக சித்தரிக்கும் பாடலில் நான் லிப்ஸிங் கொடுத்ததற்கு மன்னிக்கவும் என சொல்லி இருக்கிறார். அதே வயதுடைய தமிழ் நடிகர்கள் அப்படி மன்னிப்பு கேட்பார்களா நம் பெண்களிடம்? மாட்டார்கள். அந்த மாதிரி ஒரு கல்ச்சர் அப்போது இருந்திருக்கிறது’ என லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.