இவங்க ரெண்டு பேர தாண்டி வரமுடியுமா என்ன? - பயில்வான் ரெங்கநாதனை வச்சு செஞ்ச நடிகை
தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக பத்திரிக்கையாளராக வலம் வந்தவர் பயில்வான் ரங்கநாதன். ஏகப்பட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரமாகவும் நடித்திருப்பார். 80களில் அனேக படங்களில் பயில்வான் ரங்கநாதனை நாம் பார்க்க முடியும்.
ஆனால் சமீப காலமாக அனைத்து நடிகைகளின் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை அனைத்து பிரபலங்களின் கோபத்திற்கும் ஆளாகியுள்ளார். ஏனெனில் கதாநாயகிகளின் அந்தரங்கள் முதல் அத்தனையையும் தன் youtube சேனல் மூலமாக வெளிப்படையாக கூறி வருகிறார் பயில்வான் ரங்கநாதன்.
இதனால் அவர் மீது கோபம் கொண்ட பல பிரபலங்கள் போலீசில் புகார் அளித்தும் தொடர்ந்து தன் வேலையை செய்து கொண்டே வருகிறார். இந்த நிலையில் பயல்வான் ரங்க நாதனை ஒரு பட விழாவில் பிரபல நடிகை ஒருவர் தன் பேச்சால் வச்சு செய்திருக்கிறார்.
அனைத்து பட விழாக்களிலும் ஒரு பத்திரிக்கையாளராக கலந்து கொண்டு பிரபலங்களிடம் பல கேள்விகளை எழுப்பி வரும் பயில்வான் ரங்கநாதன் இந்த விழாவிற்கு மட்டும் அவர் வரவில்லை. இசையமைப்பாளர் தேவா, அவருடைய மகன் ஸ்ரீகாந்த் தேவா, நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் ,தயாரிப்பாளர் கே ராஜன், ஆர்.வி உதயகுமார் என பல பிரபலங்கள் அந்த விழாவில் கலந்து கொண்டனர்.
அந்த விழாவிற்கு தொகுப்பாளினியாக இருந்தவர் இரவின் நிழல் படத்தில் நடித்த நடிகை ரேகா. இவர் நடிகை சித்ரா மரணத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் .அதே சமயம் எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். ரேகாவிற்கும் பயில்வான் ரங்கநாதனுக்கும் ஏற்கனவே ஒரு பீச்சில் வைத்து கடுமையான சண்டை நடைபெற்றது.
ரேகாவை கடுமையாக விமர்சித்திருந்தார் பயில்வான் ரங்கநாதன். அதே சமயம் கே ராஜன் இடமும் நேரடியாகவே ஒரு மேடையில் மோதினார் பயில்வான் ரங்கநாதன். இந்த நிலையில் தான் லட்சுமி ராமகிருஷ்ணன் அந்த பட விழாவில் "எல்லா பத்திரிகை நண்பர்களும் வந்துள்ளீர்கள் ,ஆனால் பயில்வான் ரங்கநாதன் மட்டும் வரவில்லை. ஒரு வேளை ரேகாவையும் கே. ராஜனையும் பார்த்து பயந்துவிட்டாரோ ?"என்று பயில்வான் ரங்க நாதனை மிகவும் கிண்டலாக பேசினார்.
இதையும் படிங்க :படப்பிடிப்பில் உண்மையிலேயே அழுத கமல் – மனோரமாவுக்கும் கமலுக்கும் இப்படி ஒரு நெருக்கமா?