கருப்பு வெள்ளை காலம் முதல் தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை லட்சுமி. துவக்கத்தில் கதாநாயகியாக நடிக்க துவங்கி பின்னர் குணச்சித்திர நடிகையாக மாறியவர். இவரின் மகள் ஐஸ்வர்யாவும் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம்,கன்னடம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களிலும் லட்சுமி நடித்துள்ளார். இப்போது வெப் சீரியஸிலும் நடிக்க துவங்கிவிட்டார்.
இவர் நடித்திருந்த ‘ஸ்வீட் காரம் காபி’ என்ற வெப்சீரியஸ் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியானது. இது பற்றி கூறிய அவர், அந்த காலத்திலிருந்து இன்று வரை பெரிதாக எதுவும் மாறவில்லை. எல்லாம் ஒரே மாதிரி இருக்கிறது. தற்போது நிறைய பெண்கள் சினிமாவில் பணியாற்றுகின்றனர். பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளும் அதிகம் வருகிறது என்று தெரிவித்துள்ளார். இந்த ஸ்வீட் காரம காபியில் நடித்த போது, எனக்கு பிடிக்காத விஷயம், ஸ்கிரிப்ட் பேப்பர் கூட தமிழில் இல்லை, தங்கிலிஷில் கொடுக்கிறார்கள். நான் சண்டைபோட்டுவிட்டேன். தமிழ் படிக்க, எழுத தெரியாமல் எதற்கு இருக்கிறீர்கள் என்று என கத்திவிட்டேன்.
இத்தனை ஆண்டுகள் சினிமாவில் நடித்தும், பல ஊர்களுக்கு சென்றும், ஒரு முறை கூட படப்பிடிப்பில் அல்லது ஹோட்டலில் சாப்பிட்டதே இல்லை. சாப்பிடாமல் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை. ஆனால் வெளி உணவை சாப்பிட மாட்டேன். கடைகளில், படப்பிடிப்புகளில் உணவு சுத்தமாக இருக்காது, அசைவ உணவு கரண்டியை இதில் போட்டுவிடுவர்களோ என்று பயப்படுவேன். அதனால் நான் சாப்பிடவே மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
அதிகாலை 4 மணிக்கு எல்லாம் எழுந்துவிடுவேன், இரவு என்ன பிரச்சனையாக இருந்தாலும் 10 மணிக்கு தூங்கிவிடுவேன். என் தாய் இறந்த அன்று கூட நான் 10 மணிக்கு தூங்கிவிட்டேன், சுற்றி இருந்தவர்களிடம் ‘நான் தூங்கி எழுந்து வந்து அழுகிறேன்’ என்று கூறிவிட்டு சென்றுவிட்டேன்’ என்று நடிகை லட்சுமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நடிகையை அந்த விஷயத்துக்காக டார்ச்சர் செய்தாரா மக்கள் செல்வன்? அடிமடியிலயே கைவச்சா சும்மா விடுவோமா?
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…