மன்னர் பரம்பரை நடிகை எம்ஜிஆருடன் அதிக படங்களில் ஜோடி சேர்ந்தது எப்படி? யார் அந்த நடிகை?

ulagam sutrum valipan
தமிழ்சினிமாவில் 70 முதல் 80 வரையிலான காலகட்டங்களில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் லதா. இவரது இயற்பெயர் லதா சேதுபதி. வெகு குறுகிய காலத்திலேயே புகழின் உச்சியை அடைந்தவர்.

Actress Latha
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பன்மொழிப்படங்களிலும் நடித்து தன் திறமைமைய நிலைநாட்டியுள்ளார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தவர். இவர் உண்மையிலேயே ராமநாதபுரம் ராஜாவின் மகள் என்பது பலருக்கும் தெரியாது. ராஜகுடும்பத்தில் இருந்து நடிக்க வந்தது ஏன்? பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த போதே பட வாய்ப்பு வந்தது எப்படி?
முதல் படத்திலேயே எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் ஆரம்பத்தில் எம்ஜிஆரே படத்தில் நடிக்க அழைத்தும் லதாவின் தாயார் அதற்கு அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவயதில் சினிமாவில் அறிமுகமான இவர் எம்ஜிஆருடன் பல படங்களில் நடித்தார். பின்னர் ரஜினி, விஜயகுமாருடன் ஜோடி சேர்ந்தார்.

MGR and Latha
ராமநாதபுரம் ராஜா சண்முகராஜேஸ்வர சேதுபதி மற்றும் லீலாவதி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார் லதா. தந்தை ராமநாதபுரத்தின் கடைசி மன்னர். காமராஜரின் மந்திரி சபைகளில் அமைச்சராகவும் இவர் பதவி வகித்துள்ளார். சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரின் மனைவி ராணி வேலுநாச்சியாரின் வாரிசு வழியில் வந்தவர் தான் நடிகை லதாவின் தந்தை.
இவருடன் அக்கா, தங்கை மற்றும் 3 தம்பிகள் உடன் பிறந்தனர். லதா படித்தது எல்லாமே சென்னையில் தான். சிறுவயதிலேயே நடனத்தில் ஆர்வமாக இருந்தார். லதாவின் பெரியம்மா தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ளார். அதனால் அவர் மட்டும் லதாவை உற்சாகப்படுத்தினார். பள்ளிகளில் கலைநிகழ்ச்சியில் ஆர்வமுடன் கலந்து கொண்டார். தந்தை இறப்புக்குப் பின் தாய் லீலாவதி பிள்ளைகளுடன் கண்டிப்புடன் இருந்து வந்தார்.
நடிகர் மனோகர் தான் முதலில் போனில் சினிமாவில் நடிக்க சம்மதமா என கேட்டார். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடிக்க எம்ஜிஆர் புதுமுகம் தேடி வருவதாக அவர் தான் என்னை அனுப்பினார் என்று கூறினர். லதாவின் அம்மாவிடம் எம்ஜிஆரே நேரடியாகப் பேசி சினிமாவில் நடிக்க சம்மதத்தை வாங்கினார்.
எம்ஜிஆர் அலுவலகத்தில் நடிப்பு, டான்ஸ், வசனப்பயிற்சி என அனைத்தும் அளிக்கப்பட்டது. லதாவின் எடையை அதிகரிக்க பல சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டது. 1973ல் முதன் முதலாக எம்ஜிஆருக்கு ஜோடியாக உலகம் சுற்றும் வாலிபன் என்ற படத்தில் நடித்தார்.
தொடர்ந்து நேற்று இன்று நாளை, சிரித்து வாழ வேண்டும், உரிமைக்குரல் என பல படங்களில் நடித்து அசத்தினார். தொடர்ந்து எம்ஜிஆரின் வேண்டுகோளுக்கு இணங்க தெலுங்கு படமொன்றில் நாகேஸ்வரராவுக்கு ஜோடியாகவும் நடித்தார். அவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் வந்தது.

MGR, Latha
சிவகாமியின் செல்வன் படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து பல்லாண்டு வாழ்க, நினைத்ததை முடிப்பவன், நாளை நமதே, நீதிக்குத் தலைவணங்கு, உழைக்கும் கரங்கள், மீனவ நண்பன் ஆகிய படங்களிலும் நடித்து அசத்தினார். எம்ஜிஆரின் கடைசி படமான மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்தார்.
ரஜினியுடன் சங்கர் சலீம் சைமன், ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்களில் நடித்தார். ரஜினி லதாவை ஒரு தலையாகக் காதலிப்பதாகவும் கிசுகிசு வந்தது. லதாவுடன் நெருக்கமான ரஜினியை எம்ஜிஆர் ராமநாதபுரம் தோட்டத்திற்கு அழைத்துக் கண்டித்ததாகவும் கூறப்பட்டது. லதாவுடன் ஜோடி சேர முடியாததால்
அதே பெயரிலான வேறொரு லதாவை ரஜினிகாந்த் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. சிங்கப்பூரில் வியாபாரம் செய்து வரும் சபாபதியின் அறிமுகம் கிடைக்க அதுவே காதலாக மாறி 1982ல் அவரை திருமணம் செய்து கொண்டு படத்திற்கு முழுக்கு போட்டார். கார்த்திக், ஸ்ரீனிவாஸ் என்ற இரு புதல்வர்கள் உள்ளனர்.