கிழிஞ்ச துணியில் கிளுகிளுப்பு காட்டும் லாஸ்லியா...கொஞ்சம் ஹாட்டாத்தான் இருக்கு....
இலங்கையில் தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் லாஸ்லியா. பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ்நாட்டிலும் பிரபலமானார். ஓவியாவுக்கு பின் இவருக்குதான் ஆர்மியெல்லாம் உருவானது.
பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவினும் இவரும் ரொமான்ஸ் செய்து அந்நிகழ்ச்சிக்கு டி.ஆர்.பியை ஏற்றினர். ஆனால், கவினோடு பிரேக்கப் ஆகிவிட்டதாக சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். ஃபிரெண்ட்ஷிப் என்கிற படத்தில் நடித்தார். ஆனால், அப்படம் ரசிகர்களை கவரவில்லை. மேலும், கே.எஸ்.ரவிக்குமார் நடித்து வெளியான ‘ஆண்டிராய்டு குஞ்சப்பன்’ படத்திலும் நடித்திருந்தார்.
ஒருபக்கம், மற்ற நடிகைகளை போல் விதவிதமான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற அவர் அங்கு கவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.