எங்க ஹார்ட்டு வீக்கு!.. இதோட நிறுத்திக்கோ!.. லாஸ்லியா அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்...

by சிவா |   ( Updated:2023-11-19 01:31:59  )
losliya
X

losliya

Losliya: இலங்கையில் பல வேலைகளையும் செய்துவிட்டு டிவியில் செய்தி வாசிப்பாளராக போனவர் லாஸ்லியா. டிவியில் தமிழ் செய்திகளை வாசித்து வந்தார். அப்படியே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட அந்த பக்கம் போனார். இலங்கையில் அதற்கு சரியான வாய்ப்பு இல்லை என நினைத்தாரோ என்னவோ தமிழ்நாட்டுக்கு வந்தார்.

losliya

சென்னை வந்து வாய்ப்பு தேடியவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் தனது நடவடிக்கை மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும், அதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் கவினுடன் ரொமான்ஸ் செய்தார்.

losliya

ஆனால், அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் அந்த காதல் பிரேக்கப் ஆனது. அதன்பின் சினிமாவில் நடிக்க துவங்கினார் லாஸ்லியா. முதலில் ஃபிரண்ட்ஷிப் எனும் படத்தில் நடித்தார். அந்த படம் ஓடவில்லை. அடுத்து கூகுள் குட்டப்பா என்கிற படத்திலும் நடித்தார். அதுவும் வெற்றிப்படமாக அமையவில்லை.

losliya

ஒருபக்கம் மாடலிங் துறையிலும் ஒரு இடத்தை பிடிக்க போராடி வருகிறார். அதற்காக கிளுகிளுப்பான உடைகளை அணிந்து அழகை காட்டி தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், குட்டகவுன் அணிந்து கையில் ரோஜாப்பூவை வைத்துக்கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

losliya

Next Story