Categories: Cinema News latest news

‘லியோ’ படத்தில் இவருக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா? அப்போ த்ரிஷாவோட நிலைமை?

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது லியோ படத்தின் படப்பிடிப்பு. பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டு நடிக்கும் இந்த படத்தின் மீது நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதுவும் 14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விஜயுடன் திரிஷா இந்த படத்தின் மூலம் இணைவது படத்தின் மீதான ஒரு ஹைப்பையே அதிகரித்து இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே வெற்றி கூட்டணியாக அமைந்த விஜய் லோகேஷ் கூட்டணி இரண்டாவது முறையாக சேர்ந்து இருப்பதும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை கூட்டி இருக்கிறது. கூடுதல் சிறப்பு அனிருத் இசையில் இந்த படம் அமைய இருப்பது. இத்தனை சிறப்புகளையும் கொண்ட இந்த லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருக்கிறது.

இதையும் படிங்க : திடீரென ஏற்பட்ட விபத்து!.. ஜனகராஜுக்கு ஏற்பட்ட சோகம்!.. கை கொடுத்து தூக்கிவிட்ட இயக்குனர்..

madona1

சமீபத்தில் இந்த படத்தின் முதல் சிங்கிளான நா ரெடி பாடல் மிகப் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அந்தப் பாடல் மீது சமூக ஆர்வலர்கள் சில பேர் புகார்களையும் அளித்து இருக்கிறார்கள். இதுவும் ஒரு விதத்தில் லியோ படத்திற்கு அமைந்த ஒரு விளம்பரம் போலவே படக்குழு கருதுகிறார்கள்.

விஜய் த்ரிஷாவுடன் இணைந்து இந்த படத்தில் மன்சூர் அலிகான், சஞ்சய் தத், அர்ஜுன் போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஆரம்பத்திலிருந்து இந்தப் படத்தில் இணையும் ஒவ்வொரு நடிகர்களையும் அறிமுகப்படுத்திய வகையில் சப்தமே இல்லாமல் இந்த படத்தில் ஸ்கோர் செய்து வருகிறார் நடிகை மடோனா செபாஸ்டியன்.

இதையும் படிங்க : எல்லா பொண்ணுக்கும் பிடிக்கும் அந்த விஷயம்.. ஆனா அமலாவிற்கு பிடிக்காதாம்!.. காரணத்தை கேட்டா ஷாக் ஆயிடுவிங்க!..

ஆரம்பத்திலிருந்து மடோனா பெயர் லியோ படத்தில் குறிப்பிடப்படவே இல்லை. ஆனால் திடீரென நுழைந்திருப்பது ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சில பேர் மாஸ்டர் படத்தில் நடிகர் சாந்தனு நடித்திருந்தாலும் படத்தில் அவருடைய காட்சிகள் அந்த அளவுக்கு இடம்பெறவில்லை. அதைப் போல கூட இருக்கலாம் என்று கருதினார்கள்.

madona2

ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையாம். இந்த படத்திற்காக மடோனா 25 நாட்கள் காட்சி கொடுத்து நடித்தாராம். அந்த அளவுக்கு இந்த படத்தில் அவருக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறதாம். மேலும் சமீபத்தில் வெளியான நா ரெடி பாடலிலும் மடோனா ஆடி இருக்கிறாராம். அதனைத் தொடர்ந்து தலக்கோணம் பகுதியில் நடந்த படப்பிடிப்பிலும் கலந்து கொண்டிருந்தாராம்.

இதையும் படிங்க : இரவு முழுவதும் காரிலேயே தூங்கிய ரஜினி!.. கொதித்தெழுந்த பி.வாசு.. அந்த அட்வைஸ்தான் ஹைலைட்!..

இதை அறிந்த ரசிகர்கள் ஒருவேளை இந்த படத்தில் திரிஷாவை விட மடோனா ஸ்கோர் செய்து விடுவாரோ என இணையத்தில் தங்கள் கமெண்டுகள் மூலம் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Published by
Rohini