சன் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி பின் சீரியல் நடிகையாக மாறியவர் மகாலட்சுமி. 10 வருடங்களுக்கும் மேல் இவர் சீரியலில் நடித்து வருகிறார்.

செல்லமே, கேளடி கண்மணி, வர்ஷா, அசோக வனம், யாமிருக்க பயமேன், திரு மாங்கல்யாம் என பல சீரியல்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார்.

அணில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் பிறந்தான். ஆனால், ஒரு நடிகையோடு அனில் தொடர்பிலிருப்பதாக கூறி கணவரை பிரிந்தார்.
இதையும் படிங்க: துண்டு வச்சி மறச்சிட்டியே செல்லம்!.. ஜான்வி கபூர் கவர்ச்சியில் ஆடிப்போன ரசிகர்கள்…

சில மாதங்களுக்கு முன்பு ரவீந்தர் சந்திரசேகரனை 2வது திருமணம் செய்து கொண்டார். அதோடு, புடவையில் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், மகாலட்சுமியின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

