டெர்ராரா இருந்து கவுத்துப்புட்டியே மாப்பு! .. மஹிமா நம்பியாரின் ரகசியமான கிரஷ் இந்த நடிகரா?..
இப்ப உள்ள நடிகைகளில் மிகவும் விருப்பப்படும் நடிகையாக வளரும் நடிகையாக வலம் வருபவர் நடிகை மஹிமா நம்பியார். சமுத்திரக்கனி இயக்கத்தில் அவரின் நடிப்பில் வெளிவந்த ‘சாட்டை’ என்ற தமிழ் படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மஹிமா நம்பியார்.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட மஹிமா அருண் விஜயுடன் குற்றம் 23, என்னமோ நடக்குது, கொடிவீரன், அண்ணனுக்கு ஜே, இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற பல படங்களில் நடித்தவர். நடிகர் ஹரீஸ் கல்யாண் நடித்த முதல் படமான சிந்து சமவெளி படத்தில் முதலில் நடிக்க இருந்தது மஹிமா தானாம். அதன் பின் ஏதோ சில பல காரணங்களால் அந்த படத்திலிருந்து விலகியிருக்கிறார்.
இதையும் படிங்க : உங்களுக்கு நான் அம்மா ரோல்லாம் பண்ண முடியாது… வீட்டில் உருண்டு பிரண்ட எஸ்.ஜே.சூர்யா… அப்படிப்பட்ட நடிகை யார் தெரியுமா?
‘அறிவழகி ’ என்ற கதாபாத்திரத்தில் சாட்டை திரைப்படத்தில் மிக அருமையாக நடித்து ரசிகர்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றார். அந்தப் படத்திற்கு பிறகு தான் அவருடைய பள்ளி முடிப்பை முடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் அறிமுக படமே மலையாளத்தில் ‘காரியஸ்தன்’ என்ற படம் தான்.
அந்த படத்தில் ஹீரோவுக்கு தங்கையாக நடித்திருக்கிறார். மேலும் இவர் கைவசம் நான்கு மொழிகளிலும் பிஸியாக இருக்கிறார். பிக்பாஸ் தர்ஷனுடன் நாடு என்ற படத்தில் தமிழில் பிஸியாக இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மஹிமா அவருடைய கிரஷ் யார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : வாரந்தோறும் விருந்து!.. எம்ஜிஆரின் மாப்பிள்ளையாகவே வலம் வந்த அந்த திரைப்பிரபலம்!..
அவரின் ஆல் டைம் கிரஷ் நடிகர் விஜய் சேதுபதியாம். சினிமாவில் சீக்ரெட்டான கிரஷ் நடிகர் அர்ஜூன் தாஸாம். நடிகர் அர்ஜுன் தாஸ் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்திலும் கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி திரைப்படத்திலும் நடித்து தன் அசாத்தியமான வில்லத்தனத்தால் ரசிகர்களை எகிற வைத்திருப்ப்பார்.
இவர் தான் நடிகை மஹிமா நம்பியாரின் ரகசிய கிரஷாம். மேலும் மஹிமாவிற்கு அர்ஜூன் தாஸிடம் மிகவும் பிடித்ததே அவருடைய இனிமையான குரல் தானாம்.