அந்த சாங் பண்ணும்போது நான் ரொம்ப என்ஜாய் பண்ணினேன்....! பூரிக்கும் மாளவிகா
தமிழ்சினிமாவில் 90களில் மறக்க முடியாத நடிகைகளில் ஒருவர் மாளவிகா. கன்னத்தில் குழி விழ இவர் சிரிக்கும் புன்சிரிப்பில் எந்த ஒரு ரசிகனும் சரண்டர் ஆகி விடுவான். அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் ஹிட் தான். அவரது கேரியரில் அவர் நடித்த படங்களின் அனுபவங்கள் இதோ..!
உன்னைத் தேடி படத்தில் அதாவது தனது முதல் படத்திலேயே பெரிய நடிகரான அஜீத்துக்கு ஜோடியாக வந்து அசத்தியிருப்பார் மாளவிகா. இந்தப்படத்தில் அஜீத்துடன் நடித்த இனிமையான அனுபவங்களையும் அவர் நடித்த வேறு படங்களின் அனுபவங்களையும் பகிர்கிறார்.
முதன் முதலாக சுந்தர்.சி. தான் மாளவிகா என்ற பெயரை வைத்தார். உன்னைத்தேடி படத்தில் மாளவிகா என்று என் பெயரில் வந்த பாடல் எனக்காக வைத்தது இல்லை. படத்தில் வரும் கேரக்டரின் பெயரே அதுதான். சந்திரமுகி படத்தில் நடித்தது ஒரு சூப்பரான அனுபவம். ரஜினி ரொம்ப எளிமையானவர். பழகுவதற்கு இனிமையானவர். குருவி படத்தில் விஜய் சாருடன் ஆடும்போது 2 மாதம் கர்ப்பமாக இருந்தேன். அதனால் ஸ்லோ ஸ்டெப்பாக போட்டு இருப்பேன்.
உன்னைத்தேடி படத்திற்கு வருவதற்கு முன் குஷ்பூவை மட்டும் தான் தெரியும். ஏன்னா அவங்க தான் அப்போ பாலிவுட்ல எல்லாம் இருந்தாங்க. உன்னைத்தேடி படத்தில் அஜீத் சாருடன் நடனம் ஆடும்போது அஜீத் எவ்ளோ கோவப்படுவாங்க.
நீ என்ன பண்ற. பாடிய அவ்ளோ லூசா விடுற..டைட்டா வைக்கணும்...ரொம்ப பைட்டா இருந்துச்சு. அதுக்கப்புறம் டான்ஸ்ல இவ்ளோ ஹிட் கொடுத்துருக்கேன்கறதை என்னாலே நம்ப முடியல.
திருட்டுப்பயலே படம் பண்ணும்போது என்னோட கேரக்டருக்கு ஆக்டிங் பண்ண நிறைய ஸ்கோப் இருந்தது. வெற்றி கொடி கட்டு படத்துல கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு படம் எனக்கு கிடைச்ச லக். அந்த சாங் ஏப்ரல், மேல சுட்டெரிக்கும் வெயில்ல சூட்டிங் பண்ணினோம். அந்தப்பாட்டு எடுத்து முடியறதுக்குள்ள நான் கருப்பாயிட்டேன்.
பேரழகன் படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடியது பற்றி நான் யோசிக்கல. அது சூர்யா கூட என்றதும் தான் ஒத்துக்கிட்டேன். அவர் ஒரு நல்ல ஆக்டர். எந்த கேரக்டரையும் ஈசியா பண்ணுவாங்க.
வாளமீனுக்கும் பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது. அப்போ அது வந்து ஒரு தேசிய கீதம் மாதிரி ஆனது. அந்த சாங் பண்ணும்போது நான் ரொம்ப என்ஜாய் பண்ணினேன். எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஏன்னா சிங்கர் கைவிரலை தூக்கிட்டு இப்படி இப்படி பண்றார். எனக்கு சிரிப்பு தாங்க முடியல.