தமிழில் பெரும் புகழை பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். அதிக பட்ஜெட் கொண்டு படங்களை இயக்கும் தமிழில் முக்கியமான இயக்குனராக இவர் பார்க்கப்படுகிறார். தெலுங்கில் ஒரு ராஜமௌலி போல தமிழில் ஒரு இயக்குனர் ஷங்கர் என்று பலரும் கூறுவதுண்டு.
ஜென்டில்மேன் திரைப்படத்தின் காலகட்டத்தில் துவங்கி இப்போது வரை அவரது படங்களின் பட்ஜெட் எப்போதுமே அதிகமாகதான் இருக்கும் ஆனால் அதுதான் அவரது படங்கள் அதிக வெற்றியை கொடுக்கவும் காரணமாக அமைந்தன.
ஷங்கர் இயக்கிய திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படம் முதல்வன். சங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஒரு பேட்டியில் கூறும்பொழுது தனது தந்தையின் திரைப்படத்தில் முதல்வன் மற்றும் இந்தியன் ஆகிய இரண்டு திரைப்படங்கள்தான் எனக்கு மிகவும் பிடிக்கும் எனக் கூறியிருப்பார்.
அந்த அளவிற்கு சங்கரை அடையாளப்படுத்திய ஒரு திரைப்படமாக முதல்வன் இருந்தது. அப்போது ஹிந்தியில் பிரபலமாகவும் தமிழில் ஒரு சில படங்களிலும் நடித்திருந்த நடிகை மனிஷா கொய்ராலாவை இந்த படத்தில் கதாநாயகியாக தேர்ந்தெடுத்தார் ஷங்கர்.
ஆனால் அந்த சமயத்தில் மனிஷா கொய்ராலா அதிகமாக போதைக்கு அடிமையாகி இருந்ததால் அவருக்கு அதிகமான மது பழக்கம் இருந்தது. இதனால் தொடர்ந்து படப்பிடிப்புக்கு வராமல் மிகவும் தொந்தரவு கொடுத்துள்ளார். தினமும் இரவு அதிகம் மது அருந்திவிட்டு உறங்கச் செல்பவர், காலையில் மிகவும் தாமதமாகவே எழுந்து படப்பிடிப்பிற்கு வந்துள்ளார்.
பிரச்சனை கொடுத்த மனிஷா:
பொதுவாகவே ஷங்கர் ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பிற்கு அதிகமான செலவு செய்வதால் இந்த நேர விரயம் அவருக்கு பெரிதான பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே இதற்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கையில் பாதியிலேயே மும்பைக்கு சென்று விட்டார் மனிஷா கொய்ராலா.
அப்போது அர்ஜுனுக்கும் விக்ரமிற்கும் நல்ல பழக்கம் இருந்தது. விக்ரமின் மனைவி ஒரு மனநல மருத்துவராக இருந்தார். எனவே அவரை அழைத்து மனிஷா கொய்ராலாவிடம் பேச செய்தனர். மனிஷா கொய்ராலா எதனால் அதிகமாக மது அருந்துகிறார் என்பது குறித்து பேசி அவர் அதை சரி செய்வதற்கான வேலைகளையும் செய்தார் விக்ரமின் மனைவி.
அதன் பிறகுதான் அதிக மது அருந்தாமல் ஒழுங்காக படப்பிடிப்பதற்கு வந்து படத்தை முடித்து கொடுத்துள்ளார் மனிஷா கொய்ராலா.
இதையும் படிங்க: நடிகை சுஜாதாவை சைட் அடிப்பதற்காக இயக்குனர் செய்த முயற்சி!..இதெல்லாம் நடந்துச்சா?…
நேற்று சோசியல்…
தனது தந்தை…
Sun serials:…
தமிழக வெற்றிக்கழகம்…
தமிழ் சினிமாவில்…