அரவிந்த்சாமிக்கு ஜோடியாக வாய்ப்பு கிடைத்தும் நடிக்க மறுத்த நடிகை! அண்ணன் மவுசு தெரிஞ்சும் யாருப்பா அந்த நடிகை?
தமிழ் சினிமாவில் ஒரு கோடீஸ்வரன் வீட்டு பிள்ளையாக பிறந்து சினிமாவில் நடிக்க வந்தவர் நடிகர் அரவிந்த்சாமி. கிட்டத்தட்ட அரவிந்த்சாமியின் சொத்துமதிப்பு 3300 கோடியாம். அந்த தகவல் தான் இப்போது இணையத்தில் தீயாய் பரவுகிறது. ஆனால் அது இதுவரைக்கும் யாருக்கும் தெரியாமல் இருந்தது.
அவரது தந்தை ஒரு கோடீஸ்வரனாக இருந்தாலும் தனது மகனுக்கு பணத்தின் அருமை தெரியவேண்டும் என சிறிதளவே பாக்கெட் மணி கொடுப்பாராம். ஆனால் அது அரவிந்த்சாமிக்கு போதுமானதாக இல்லாததால் மாடலிங்கில் தன்னை இணைத்துக் கொண்டாராம். அதன் விளைவுதான் விளம்பர படங்களில் அவரை நடிக்க காரணமாக இருந்தது.
இதையும் படிங்க : அஜித்துக்கு அத கத்து கொடுத்ததே நான்தான்! வித நான் போட்டது – சீக்ரெட்டை பகிர்ந்த ரோபோ சங்கர்
அந்த சமயத்தில் தான் மணிரத்தினம் தளபதி படத்திற்காக கலெக்டர் கதாபாத்திரத்திற்கு நடிகரை தேர்வு செய்து கொண்டிருந்த நிலையில் அரவிந்த்சாமியின் அந்த விளம்பரத்தை பார்த்து ஈர்க்கப்பட்டிருக்கிறார். அதன் பிறகே தளபதி படத்தில் அதுவும் ரஜினிக்கு தம்பியாக முதல் படத்திலேயே நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது.
முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் அரவிந்த்சாமி. அதனை தொடர்ந்து தான் ரோஜா, பம்பாய் போன்ற மணிரத்தினத்தின் படங்கள் அரவிந்த்சாமியை எங்கேயோ கொண்டு போய் சேர்த்தது. குறிப்பாக பெண்களை கொள்ளைக் கொண்ட கள்வனாக மாறினார் அரவிந்த்சாமி.
எத்தனையோ நடிகைகள் அரவிந்த்சாமிக்கு ரசிகைகளாக மாறினார்கள்.ஆனால் ஒரே ஒரு நடிகை அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு போய்விட்டாராம். அது யாரென்று தெரியுமா?
இதையும் படிங்க : அஞ்சலியின் மயக்கத்தில் ஆட்டம் போட்ட ஹீரோ!..படாத பாடு படுத்திய அந்த நடிகர்!..
பம்பாய் படத்தில் நடித்த மனிஷா கொய்ரலாதான். அதற்கு காரணம் அந்தப் படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவா நடிக்க தயங்கித்தான் வேண்டாம் என்று மும்பைக்கே சென்று விட்டாராம் மனிஷா. அதன் பிறகு மனிஷாவின் தோழிகளிடம் மணிரத்தினம் சொல்லி அந்த தோழிகளின் முயற்சியால்தான் மீண்டும் மனிஷா அந்தப் படத்தில் நடிக்க வந்தாராம்.