சூப்பர் ஸ்டாருனு நினைச்சு என் ஸ்டார இழந்துட்டேன்! ரஜினி படத்தால் கெரியரை இழந்த நடிகை

rajini
Actor Rajinikanth: ரஜினி படம் என நினைத்து ஆசையோடு நடிக்க வந்து அதன் பிறகு அந்தப் படத்தில் நடித்த நடிகைக்கு வாய்ப்புகளே வராமல் போன சோகம் பற்றிய செய்தி தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் ஒரு சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு என தமிழ்நாடு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலேயே ஒரு பெரிய வரவேற்பு இருக்கிறது.
எங்கு போனாலும் ரஜினிக்கு இருக்கிற மாஸ் வேற எந்த நடிகருக்கும் இருந்ததில்லை. அந்த அளவுக்கு பேரும் புகழும் உடைய நடிகராக ரஜினி இருந்து வருகிறார். மூத்த நடிகர்களில் இன்னும் தன்னுடைய அசாத்திய நடிப்பாலும் ஸ்டைலாலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு டப் கொடுக்கும் நடிகராகவும் இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: இப்படி புஸ் ஆகிடுச்சே!.. முதல் வாரத்திலேயே முக்கிய கவினின் ஸ்டார்!.. மொத்த வசூல் இவ்வளவு தானா?..
இந்த நிலையில் அவருடைய நடிப்பில் வேற எந்த படத்திற்கும் இல்லாத ஒரே எதிர்பார்ப்பு பாபா படத்தில் இருந்தது. ஏனெனில் பாபா படத்தை பெரிய அளவில் விளம்பரம் செய்தனர். அந்த படத்தின் மீது அதிக அளவு எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் அந்த மொத்த எதிர்பார்ப்பையும் சுக்குநூறு ஆக்கியது பாபா திரைப்படம். ரஜினியின் கெரியரில் இதுவரை இல்லாத நஷ்டத்தை பாபா திரைப்படம் அடைந்தது.

manisha
அதனால் ரஜினிக்கு நேர்ந்த இழப்பு படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நேர்ந்த இழப்பு என அனைத்துமே நமக்கு தெரியும். இந்த நிலையில் அந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த மனிஷா கொய்ராலா பதிவிட்ட ஒரு கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. பாபா படத்தில் நடித்த பிறகுதான் தென்னிந்திய சினிமாவில் நடிப்பதற்கு உண்டான வாய்ப்புகள் மனிஷா கொய்ரலாவுக்கு குறைந்ததாம். அதுவரை தென் இந்திய சினிமாக்களில் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்து கொண்டிருந்ததாம். ஆனால் பாபா படத்திற்கு பிறகு அந்த வாய்ப்புகள் எல்லாம் அவரை விட்டு விலகியதாக அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் மனிஷா கொய்ராலா.
இதையும் படிங்க: நான் முத்தம் தின்பவள்!.. ஒரு முரட்டு பூ இவள்!.. செம சீனு காட்டும் ஷிவானி நாராயணன்.. எல்லாமே அள்ளுது!