தலைவரா? மக்கள் செல்வனா? இருதலைக் கொள்ளியாக மாட்டிக்கிட்டு முழிக்கும் மஞ்சுவாரியார்!

by Rohini |   ( Updated:2023-08-16 09:27:45  )
manju
X

manju

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் விடுதலை. நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. படம் எடுக்கும்போதே இரண்டு பாகங்களாக திட்டமிட்டே வெற்றிமாறன் இயக்கினார்.

அதில் முதல் பாகத்தின் கடைசி கிளைமாக்ஸ் இல் இரண்டாம் பாகத்திற்கான சில கட்ஸ்களையும் சேர்த்து வெளியிட்டு இருந்தார். முதல் இரண்டு பாகங்களையும் முடித்து விட்டதாக கூறிய வெற்றிமாறன் இரண்டாம் பாகத்திற்கான சில காட்சிகள் இன்னும் பெண்டிங்கில் இருப்பதாக கூறி அதற்கான படப்பிடிப்பு இப்போது நடைபெற்ற வருகிறது.

இதையும் படிங்க : ஒரு வேளை டைட்டில்ல பிரச்சினையா இருக்குமோ! மறுபடியும் ‘வணங்கான்’ படத்தில் ஏற்பட்ட குளறுபடி

இரண்டாம் பாகத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பு சிறுமலையில் நடைபெற்று இப்போதுதான் படக்குழு சென்னைக்கு வந்திருக்கிறது. இந்த இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரமாக வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. படம் முழுக்க விஜய் சேதுபதியை மையப்படுத்தி தான் இரண்டாம் பாகம் அமைய இருக்கிறது.

அதற்காக விஜய் சேதுபதியிடம் 25 நாட்கள் கால் சீட் கேட்டு இருக்கிறார் வெற்றிமாறன். ஆனால் அவர் இருக்கும் பிசியில் பார்த்து சொல்கிறேன் என சொல்லி இருக்கிறாராம். அந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடிக்கிறார்.

அதே வேளையில் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தயாராக இருக்கும் ரஜினி 170 படத்திலும் ரஜினிக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். ஆனால் இந்த இரண்டு படங்களுமே ஒரே நேரத்தில் நடக்க இருப்பதால் மஞ்சுவாரியாரால் இதை சமாளிக்க முடியுமா என்ற குழப்பத்தில் இருக்கிறாராம்.

இதையும் படிங்க : வசூலை அள்ளும் ஜெயிலர்!.. முதல் ஆளாக நெல்சனுக்கு வலை விரித்த அந்த நடிகர்!…

அதே வேளையில் விஜய் சேதுபதி சொல்லும் தேதியை பொறுத்துதான் எந்த படத்தில் மஞ்சுவாரியார் யாருக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்ற ஒரு முடிவு தெரியும் என்று கூறப்படுகிறது.

Next Story