நயன்தாராவின் ராக்காயி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவங்களா?!.. அடடே மிஸ் ஆயிடுச்சே!..

nayanthara
நடிகை நயன்தாரா நடித்து வரும் ராக்காயி திரைப்படத்தில் முதலில் நடிப்பதற்கு நடிகை மஞ்சுவாரியர் தான் தேர்வு செய்யப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தொடர்ந்து சினிமாவில் 20 வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி நடித்து வருகின்றார். 40 வயதை தாண்டிய நிலையிலும் தற்போது வரை ஹீரோயினியாக நடித்து அசதி வருகின்றார்.
இதையும் படிங்க: மறக்குமா நெஞ்சம்! உசுரே!.. மனைவிக்காக உருகி பாட்டு பாடிய ஏ.ஆர் ரகுமான்?!… வைரலாகும் வீடியோ!…
திருமணம், குழந்தை மற்றும் பிசினஸ் என அனைத்திலும் சக்ஸஸ்புல் பெண்மணியாக இருக்கும் நடிகை நயன்தாரா சினிமாவில் தனக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகின்றார். அதிலும் ஹீரோயினுக்கான கதைகள் இவருக்கு சூப்பராகவே ஒர்க் அவுட் ஆகும். அப்படி இவர் தேர்வு செய்து நடித்த டோரா, அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், மூக்குத்தி அம்மன், அன்னபூரணி என அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது.
கடைசியாக 2023 ஆம் ஆண்டு அன்னபூரணி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து அவரது நடிப்பில் எந்த திரைப்படங்களும் வெளியாகவில்லை. தற்போது மண்ணாங்கட்டி என்கின்ற திரைப்படத்திலும், ராக்காயி என்கின்ற திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இவரின் 40வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று முன்தினம் ராக்காயி திரைப்படத்தின் டைட்டில் டீசரை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தார்கள்.

manju warrior
இந்த டீசர் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. கையில் ஈட்டி மற்றும் ஆயுதத்துடன் போராடும் ஒரு பெண்மணியாக மிரட்டி இருக்கின்றார். இந்த டீசர் ராக்காயி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கின்றது. இப்படத்தை இயக்குனர் செந்தில் நல்லசாமி இயக்குகின்றார். இந்த திரைப்படத்தின் மூலமாக இவர் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகின்றார்.
இப்படத்தை டிரம்ஸ்டிக்ஸ் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்நிலையில் முதலில் இந்த திரைப்படத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டது நடிகை நயன்தாரா இல்லையாம். முதன்முதலாக இப்படத்தின் கதையை எழுதி முடித்த உடனே நடிகை மஞ்சுவாரியரிடம் படத்தின் கதையை தெரிவித்திருக்கின்றார் இயக்குனர். அவருக்கும் இப்படத்தின் கதை மிகவும் பிடித்திருந்த காரணத்தால் இதில் நான் தான் நடிப்பேன் என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க: எங்கேயோ இடிக்குதே!.. ரஹ்மானின் கிதார் இசைக்கலைஞர் அறிவித்த விவாகரத்து?!… அதுவும் எப்ப தெரியுமா?!..
ஆனால் புரொடக்ஷன் நிறுவனம் தரப்பிலிருந்து இந்த கதையை இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் எடுக்கும் போது மஞ்சுவாரியரை வைத்து எடுத்தால் அது சரியாக இருக்காது என்று கூறி அடுத்ததாக நயன்தாராவிடம் இந்த படத்தின் கதையை கூறி ஓகே செய்தார்களாம். இப்படம் முதலில் பீரியட் பிலிம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இது ஒரு குழந்தையின் அம்மாவுடைய தியாகம் அடிப்படையில் திரைப்படத்தை இயக்கி வருகிறாராம் இயக்குனர் செந்தில் நல்லசாமி.