Connect with us
mano1

Cinema History

மந்திரக்கட்டா? கேட்கவே பயங்கரமா இருக்கு! சினிமாவில் மனோரமா சிம்மாசனம் போட்டு உட்கார இதுதான் காரணமா?

தமிழ் சினிமாவில் ஒரு நகைச்சுவை நடிகையாக அனைவர் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் நடிகை மனோரமா. கிட்டத்தட்ட 1500 படங்களுக்கும் மேல் பல மொழிகளில் நடித்த பெருமைக்குரிய நடிகை மனோரமா. ஆச்சி என அன்புடன் அழைக்கப்பட்ட மனோரமா அன்றைய முன்னணி நடிகர்களாக இருந்த சிவாஜி, எம்ஜிஆர் ஆகியவர்களுக்கு இணையான ஒரு ஸ்டார் அந்தஸ்துடனையே வலம் வந்தார்.

மூன்று முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை

பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான மனோரமா தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜியின் நடிப்பிற்கு இணையாக பேசப்பட்ட ஒரு நடிகையாக திகழ்ந்தார். கிட்டத்தட்ட ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த நடிகை என்ற பெருமைக்கும் சொந்தக்காரராக திகழ்ந்தார். பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா, எம்ஜிஆர், ஆந்திர முதலமைச்சர் என்டி ராமராவ் ஆகியோருடன் மனோரமா நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க :ப்ளீஸ்!..விஜய் மனசு உடைஞ்சி போயிடுவான்!.. அதமட்டும் சொல்லிடாதீங்க!. லியோனியிடம் கெஞ்சிய எஸ்.ஏ.சி…

mano

mano

மனோரமாவை சிறு வயதிலிருந்து அவரது தாயார் மட்டுமே கவனித்துக் கொண்டு வந்தார். கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மனோரமாவின் தாய் அவருடைய கணவரை பிரிந்து மனோரமாவை அழைத்துக் கொண்டு காரைக்குடி அருகே இருக்கும் பள்ளத்தூரில் குடிபெயர்ந்தார். சிறுவயதிலிருந்தே மனோரமாவிற்கு பாடுவது என்பது மிகவும் பிடிக்கும்.

அனைத்து விழாக்களிலும் கோலோச்சிய மனோரமா

அவர் ஊரில் நடக்கும் பல நிகழ்ச்சிகளுக்கு மனோரமா பாடியிருக்கிறாராம். அதன் காரணமாகவே பெரிய பெரிய விழா, சர்க்கஸ் போன்றவைகள் நடக்கும்போது மனோரமாவிற்கு என்று இலவசமாக டிக்கெட் வழங்கப்பட்டு விடுமாம். அந்த சமயம் பள்ளத்தூருக்கு ஒரு சர்க்கஸ் கம்பெனி வந்து இறங்கியதாம். அதை நடத்தி வந்த தம்பதிகள் மனோரமாவின் பெருமைகளை அறிந்து தங்களுடைய சர்க்கஸ் கம்பெனியில் இணைத்துக் கொள்ள ஆசைப்பட்டார்களாம்.

இதையும் படிங்க : எம்.ஜி.ஆரை கைவிட்ட திரையுலகம்!.. துணிந்து இறங்கிய தயாரிப்பாளர்.. நட்புன்னா இதுதான்!…

அதற்கு மனோரமாவின் தாயும் ஒப்புதல் வழங்க ஒரு நாள் மனோரமா அந்த சர்க்கஸ் கம்பெனிக்கு சென்று இருக்கிறார். பொதுவாக சர்க்கஸ் நடக்கும் போது ஒருவர் வாய் நிறைய தண்ணீர் ஊற்றி அதில் சில மீன்களையும் விழுங்கி திரும்ப எடுக்கும் சாகசங்களை செய்யக்கூடியவராம். அதேபோல தான் அன்றும் அந்த சர்க்கஸ் காரர் செய்திருக்கிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக விழுங்கிய மீன்களை எடுக்க முற்படும்போது வாயிலிருந்து ரத்தம் கொட்டியதாம்.

mano2

mano2

மந்திரகட்டால் சிக்கிய சம்பவம்

உடனே அந்த சர்க்கஸ் காரர் யாரோ மந்திரவாதி என்னை மந்திர கட்டு போட்டு வைத்திருக்கிறார். தைரியம் இருந்தால் வெளியே வா என கூறினாராம். உடனே அந்தக் கூட்டத்தில் இருந்த மந்திரவாதி வெளியே வந்து முடிந்தால் இந்த கட்டை அவிழ்த்து உன்னை நீ காப்பாற்றிக் கொள் என்று சொல்லிவிட்டு போய்விட்டாராம். அந்த சேலஞ்சை ஏற்றுக் கொண்ட சர்க்கஸ் காரர் அந்த மீன்களை எடுக்க முடியாமல் மன்றாடினாராம்.

இதையும் படிங்க : அந்த மாதிரி எந்த ஹீரோவும் செய்யமாட்டான்!.. இம்பாசிபிள்!. கமலை பாராட்டி தள்ளிய பாரதிராஜா…

அவ்வளவுதான் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மனோரமா அந்த சர்க்கஸ் கம்பெனியில் இருந்து வெளியே வந்து விட்டாராம். இந்த ஒரு நிகழ்வு தான் மனோரமாவை சினிமாவிற்குள் அடியெடுக்க வைத்திருக்கிறது. இந்த சம்பவம் மட்டும் அன்று நடக்காவிட்டால் தமிழ் சினிமா இப்படி ஒரு நடிகையை இழந்திருக்கும் என இந்த பதிவை கூறிய சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top