இதை நான் செஞ்சா மக்கள் ஏத்துக்குவாங்களா?!.. தயங்கிய ஆச்சி மனோரமா!.. ஆனா நடந்ததோ வேறு!..

by சிவா |
manorama
X

manorama

சிறு வயதிலேயே நாடங்களில் ஆடிப்பாடி நடிக்க துவங்கி அப்படியே சினிமாவுக்கு வந்தவர் மனோரமா. கருப்பு வெள்ளை காலம் முதல் கலர் சினிமா வரை பல தலைமுறை நடிகர்களுடனும் மனோரமா நடித்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் துவங்கி, ரஜினி, கமல் படங்களிலும் நடித்து, பின் அஜித், விஜய் படங்களிலும் நடித்து அதன்பின் வந்த சின்ன சின்ன நடிகர்களின் படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் மனோரமா.

manorama

manorama

மனோரமா நன்றாக நடிப்பது மட்டுமில்லாமல் நன்றாக பாடத்தெரிந்த நடிகையும் கூட. இவர் நடித்த பல படங்களில் பாடல்களை பாடியுள்ளார். மறைந்த நடிகர் நாகேஷுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தவர். ஏவிஎம் தயாரிப்பில் பாண்டியராஜன் நடித்த திரைப்படம் பாட்டை சொல்லை தட்டாதே. இப்படம் 1988ம் ஆண்டு வெளியாகி பெரிய ஹிட் அடித்தது.

manorama

manorama

இப்படத்தில் பாண்டியராஜனின் பாட்டியாக வரும் மனோரமாவுக்கு அழுத்தமான கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும். இவரை சுற்றியே கதை நகரும். இப்படத்தில் பாண்டியராஜனுக்கு ஜோடியாக ஊர்வசி நடித்திருந்தார இந்த படத்தின் இறுதி காட்சியில் ரவுடிகளுடன் மனோரமா ஒரு சண்டை போடுவது போல் காட்சி வரும். முதலில், இந்த காட்சியில் அடிக்க மனோரமா தயங்கியுள்ளார். அதற்கு காரணம் சண்டை காட்சியில் நடிக்க வேண்டாம் என அவரின் திரையுலக நடிகர்/நடிகைகள் அவரை எச்சரித்துள்ளனர்.

manorama

எனவே, இப்படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனத்திடம் சென்று ஏவிஎம் சரவணனிடம் ‘சண்டை காட்சியில் நான் நடித்தால் சரி வருமா? ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா?’ என தயங்கியபடி கேட்டுள்ளார். அதற்கு அவர் ‘உங்களால் அந்த காட்சியில் நடிக்க முடியும் என நம்பிக்கை இருக்கிறதா?’ என கேட்டுள்ளார். அதற்கு மனோரமா ‘ஏன் முடியாது. நான் நடிப்பேன்’ என சொல்ல, பிறகென்ன நடியுங்கள் அவர் சொன்னாராம். திரைப்படம் வெளியான போது அந்த காட்சிக்கு ரசிகர்களிடம் அவ்வளவு வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அடிக்கடி வெளிநாடு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் கமல்!.. பின்னனியில் இருக்கும் காரணம் இது தானா?..

Next Story