மனோரமா அதிகமாக பார்த்த ஒரே திரைப்படம்! – யாருக்காக தெரியுமா?

Published on: May 30, 2023
mano
---Advertisement---

சினிமாவில் ஒரு நடிகருக்கு இணையாக தன்னாலும் நகைச்சுவை பண்ண முடியும் என்பதை தன் நகைச்சுவை நடிப்பின் மூலம் நிரூபித்து காட்டியவர் நடிகை மனோரமா. அந்தக் காலத்தில் ஏராளமான நகைச்சுவை நடிகைகள் இருந்தாலும் அவர்களுக்கு எல்லாம் சிறந்த நடிகையாக காணப்பட்டார் மனோரமா. எம்ஜிஆர் ,சிவாஜி இவர்களின் கால்ஷீட் கூட மிக எளிமையாக கிடைத்துவிடும். ஆனால் மனோரமாவின் கால்ஷீட்டுக்காக எத்தனையோ தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் காத்திருந்த காலங்கள் உண்டு.

mano2
mano2

சினிமாவை பொருத்தவரைக்கும் மனோரமாவின் சாதனை மிகவும் வியப்புக்குரியது. 1200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார் மனோரமா. நாடகங்கள் ,திரைப்படங்கள் என மாறி மாறி நடிப்பிற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.

ஆரம்பத்தில் ஒரு நாடக நடிகையாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய மனோரமா தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். மேலும் அனைவராலும் ஆச்சி என அன்பாக அழைக்கப்பட்டவர்.

mano3
waheeda rehman

இந்த நிலையில் மனோரமாவை பற்றிய ஒரு சுவாரசிய தகவலை பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் கூறினார். இத்தனை படங்களில் நடித்த மனோரமா ஒரு படத்தையாவது அதிக முறை பார்த்திருப்பாரா என்றால் இல்லையாம். படங்கள் பார்ப்பது என்பது மிகவும் பிடிக்குமாம்.ஆனால் ஒரு படத்தை திரும்பத் திரும்ப போட்டு பார்க்க வேண்டும் என்று அவர் விரும்ப மாட்டாராம்.

அப்படி ஒரு படத்தை இரண்டு ,மூன்று முறை பார்த்திருக்கிறார் என்றால் அது ஹிந்தியில் வெளிவந்த நீல் கமல் என்ற திரைப்படமாம். 1968 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த நீல்கமல் திரைப்படத்தை மிகவும் விரும்பி பார்த்து இருக்கிறார் மனோரமா. அதுவும் அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வகிதா ரஹ்மான் என்ற நடிகைக்காக மட்டுமே அந்த படத்தை பார்த்தாராம்.

mano4
mano4

வகிதா ரஹ்மானின் நடிப்பை மிகவும் விரும்புவாராம் மனோரமா. ஒரு சமயம் விமான நிலையத்தில் மனோரமாவும் வகிதா ரஹ்மானும் சந்தித்துக் கொண்டனர் .அப்போது இந்த நீல் கமல் படத்தை பற்றி மிகவும் வியப்பாக கூறி இருக்கிறார் மனோரமா .அந்த நேரத்தில் வகிதா ரஹ்மானும் மனோரமாவிடம்” நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். உடனடியாக ஹிந்தியை கற்றுக் கொள்ளுங்கள். உங்களை மாதிரி ஒரு நடிகை எங்கள் சினிமாவில் இல்லை. அதனால் சீக்கிரம் கற்றுக்கொண்டு பாலிவுட்டிற்கு வாருங்கள்” என்று கூறினாராம்.

அதுமட்டுமில்லாமல் மனோரமாவிடம் வகிதா ரகுமான் “தில்லானா மோகனாம்பாவில் நீங்கள் நடித்த கதாபாத்திரம் என்னை மிகவும் பிரமிக்க வைத்து விட்டது. அதைப்போல யாருமே நடிக்க முடியாது” என்றும் பாராட்டி மெய்சிலிர்த்து கூறினாராம்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.