ஜென்டில்மேன் படத்துல கேரக்டர் சின்னது தான்...ஆனா ரொம்ப ஸ்ட்ராங்க்....மனம் திறக்கிறார் மதுபாலா

mathubala2
நடிகை மதுபாலா அழகான சிறந்த நடிகை. தனக்கென தனித்துவமான நடிப்பில் ரசிக நெஞ்சங்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். தனது ஆரம்பகால சினிமாவைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.
1996 மறக்க முடியாத வருடம். இந்தில தான் நிறைய படம் ரிலீஸாச்சு. தமிழ்ல வந்து பாஞ்சாலங்குறிச்சி, மிஸ்டர் ரோமியோ. இந்த ரெண்டுபடம் 2 வருஷம் கழிச்சி ரிலீஸாச்சு. இந்திப்படத்தைத் தான் நான் மனசுல வச்சிக்கிட்டு நடிகையானேன்.

Mathubala
ஆனால் எல்லாமே தமிழ்சினிமாவுல இருந்துதான் கிடைச்சது. என்னோட முதல் படம் வந்து தமிழ்ப்படம். என்னோட நிறைய படங்கள் தமிழில் தான் பிரபலமாயின. ஆனா...எனக்கே தெரியாம தமிழ்ல இருந்து இந்திக்குப் போயிட்டேன்.
தமிழ்ப்படத்துல உடனடியாக கால்ஷீட் கேட்கும்போது என்னால கொடுக்க முடியல. அதனால தான் நான் வந்து ஷிப்டாகி இந்திக்குப் போயிட்டேன். ஒரு திருப்தியும், மகிழ்ச்சியும் தமிழ்சினிமாவில் நடிக்கும் போது தான் கிடைத்தது.
ரோஜா தமிழ்ப்படம் தான் எனக்கு மிகவும் பிடித்தது. எனது மொத்த கேரியரில் ரொம்பவே வித்தியாசமான படம் அதுதான். இந்தில எனக்கு நிறைய பிரச்சனை வந்ததும் பாலசந்தர் சார் தான் எனக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழ்ல நடிக்க வச்சாங்க.
ரோஜா கூட அவரோட பேனர்ல வந்ததுதான். என்னோட கேரியரே பாலசந்தர் சார் ஆசிர்வாதத்தோடத் தான் தொடங்கிருக்கு. அவரோட படம் பண்ணனும்னா நான் எந்தக் கேரக்டர் பண்ணனும்.
இந்தக் கேரக்டர் பண்ணலாமா வேணாமான்னு நான் என்னைக்குமே நினைச்சதில்ல. எங்கிட்ட ஒருத்தர் கேட்டார். நீங்க ஹேமமாலினியோட கசின். அவங்க இவ்ளோ பெரிய லெவல்ல இருக்காங்களே.
நீங்க அந்த லெவலுக்கு வருவீங்களான்னு கேட்டார். இந்த கேள்விக்கு அர்த்தமே இல்ல. ஏன்னா அவங்க வேற ஜெனரேஷன். 10 வருடத்திற்கு முன்பு சூப்பர்ஸ்டாரா இருந்தாங்க. என்னை யாரோடவும் கம்பேர் பண்ணக்கூடாது.
குஷ்பூ அவங்களோட லெவல்ல நடிப்பாங்க. நான் என்னோட சென்சேஷன்ல நடிப்பேன். ஆனா எனக்கு குஷ்பூ நெருங்கிய தோழி. எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். எனது குடும்பம் மிகச்சிறியது. எனக்கு ஒரு அப்பா, ஒரு அண்ணன் இருக்காங்க.
நிறைய அத்தைகளும், உறவினர்களும் உள்ளனர். அப்பா தயாரிப்பாளர். ஹேமா நடிகை. என்னோட அண்ணன் வெளிநாட்டில் கம்ப்யூட்டர் படிக்கிறார். ரோஜாவுல என்னோட நடிப்பை அனைத்துத் தரப்பினரும் ரசிச்சாங்க.

Gentleman mathubala, Arjun
எனக்கு ஜென்டில்மேன் படத்துல என்னோட கேரக்டர் ரொம்ப பிடிக்கும். இயக்குனர் ஷங்கரோட அந்தப்படத்துல என்னோட கேரக்டர் சின்னதா இருந்தாலும் ரொம்பவே ஸ்ட்ராங்கா இருந்தது.
அதுக்கு முன்னாடி ரோஜா, அழகன், வானமே எல்லை படங்களில் எல்லாம் எனக்கு டான்ஸ் சம்பந்தமான கேரக்டர்கள் அவ்வளவா இல்ல. ஆனா இந்தப்படத்துல தான் அதைப் பூர்த்தி செய்ய முடிஞ்சது. ஷங்கரோட டைரக்ஷன்ல நடிக்கும்போது ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது.