நான் ஒன்னும் உத்தமிலாம் இல்ல!. இப்படி ஓப்பனா போட்டு உடைச்சிட்டாரே பிக்பாஸ் மாயா…

Published on: December 5, 2023
actress maya
---Advertisement---

Maya: தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும்  பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலாமானவர் நடிகை மாயா. இவர் தமிழில் சில திரைப்படங்களில் துணை கதாபாத்திர வேடங்களில் நடித்துள்ளார். இவர் தொடரி, மகளிர் மட்டும், வேலைக்காரன் போன்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவர் மத்தியிலும் கடும் விமர்சனங்களை பெற்று வருகிறார். தனக்கென புள்ளிங்கோ கேங் எனும் தனி கேங்கை வைத்து கொண்டு இவர் செய்யும் அலப்பறை பார்ப்பவர்களுக்கு முகம் சுழிக்கும் விதமாக அமைந்துள்ளது.

இதையும் வாசிங்க:விஜயகாந்திடம் ஜானகி அம்மாள் காட்டிய அன்பு!.. கேப்டனுக்கு அவர் கொடுத்த பரிசுதான் ஹைலைட்!..

இவரை பற்றி சமூக வலைதளங்களில் எதிர்மறையான பல விமர்சனக்களை மக்கள் தெரிவித்து வருகின்றனர். இவர்தான் சதி செய்து பிரிதீப்பை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வைத்தார் எனவும் கடும் விமர்சனங்கள் உலாவுகின்றன. மேலும் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் இவரே காரணம் எனவும் சைலண்டாக இருந்து காய் நகர்த்துகிறார் எனவும் மக்களிடையே பேசப்படுகின்றன.

இது போதாதென்று மாயா நிஜ வாழ்வில் ஒரு லெஸ்பியன் எனவும் கருத்துகள் உலாவின. மேலும் இதே நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள விசித்ராவும் ஒரு முறை தனது முன்னாள் கணவர்தான் மாயாவின் லெஸ்பியன் நிறுவனத்திற்கு நிதி உதவி செய்பவர் என ஓபனாகாவே கூறியிருந்தார்.

இதையும் வாசிங்க:கிண்டலடித்த சினிமா உலகம்!.. அவமானத்தை தாண்டி ‘அப்பு’வாக சாதித்து காட்டிய கமல்..

மாயா பல படங்களில் நடித்திருந்தாலும் சமீபத்தில் அவர் நடித்து பிரபலமான திரைப்படம் விக்ரம். இப்படத்தில் இவர் விலைமாதுவாக நடித்திருந்தார். மேலும் இது குறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்கையில் தான் அந்த மாதிரியான விஷயத்திற்கு வெட்கப்படவே மாட்டேன் எனவும், மேலும் இங்கு எவரும் உத்தமர்கள் இல்லை எனவும் கூறியிருந்தார்.

மற்றவர்களை பற்றி பேசிய மாயா நானும் ஒன்னும் பெரிய உத்தமிலாம் இல்லை எனவும், தானும் பல தவறுகள் செய்துள்ளதாகவும் மேலும் தன்னிடமும் பல குறைகள் கண்டிப்பாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார். நான் நல்லவர் என கூறி தவறு செய்பவர்கள் மத்தியில் மாயா இப்படி கூறியிருப்பது அவரின் வெளிப்படையான எண்ணத்தை காட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க அப்போ மாயா அப்படிதான் போல… அப்போ புரியல.. ஆனா இப்போ புரியுது.. என லெஸ்பியன் குறித்த சர்ச்சைகளை மனதில் வைத்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிங்க:எனக்கே பிடிக்கல!.. கோபத்துல எடுத்த முடிவு அது!.. பல வருஷம் கழிச்சி வெளிப்படையாக சொன்ன அமீர்..

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.