Cinema History
எல்லாரும் பெரிசா வாயிலயே சொல்லி பிரயோஜனம் இல்ல.. மீனாவுக்கு ஏன் இந்தக் கோபம்?
நடிகை மீனா சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக வந்து அறிமுகமானவர். 90களின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்ந்தார். அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்துவிட்டார்.
ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு இருந்தார்.
கடந்த ஜூன் மாதம் இவரது கணவர் வித்யாசாகருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு பல மாதங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சையில் எந்தவிதப் பலனும் இல்லாமல் போனது. ஜூன் 28ல் காலமானார்.
மணமாகி 13 ஆண்டுகளில் மீனா தன் கணவரை இழந்ததால் சினிமா உலகினரும், ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் கூறிய வண்ணம் உள்ளனர். தற்போது கொஞ்சம் அந்தத் துயரில் இருந்து மீண்டு வந்ததும் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். பார்க்கலாமா…
அம்மா ரொம்பவே ஸ்ட்ராங்கான பெண். நான் இந்த வயசு வரைக்கும் வேலை செஞ்சுக்கிட்டு இருக்கேன். சினிமாவுல நடிச்சேன்னா அதுக்குக் காரணம் அம்மா தான். இது சரியா, தப்பான்னு எதுவுமே எனக்கு தெரியாது.
எங்க அம்மா பண்ணதைப் பார்த்துப் பார்த்து வளர்ந்ததனால எனக்கு அவங்க இருக்குற வரை எனக்குத் தெரியல. இப்போ நான் இந்த அளவு உறுதியா இருக்குறன்னா அதுக்குக் காரணம் அம்மா தான்.
பிரண்ட்ஸ்களும் ஒரு காரணம் தான். எனக்கு எங்கெங்க இருந்தோ யார் யார்லாமோ வந்து ஆறுதல் சொன்னாங்க. ஒரு சீரியஸான ஒரு விஷயம் நடக்கும்போது தான் யார் யார்லாம் நமக்கு இருக்காங்கன்னு தெரிய வருது.
என் கணவருக்கு ஸ்பாட்லைட்ல வருவதே பிடிக்காது. எனக்கு தெரிஞ்சவங்க எல்லாருமே அவருக்கும் தெரியும். என்னோட பிரண்ட்ஸ் எல்லாருமே அவருக்கும் பிரண்ட்ஸ்.
இப்ப வரைக்கும் எனக்கு ஆறுதல் சொல்றதுக்கு வந்துக்கிட்டு இருக்காங்க. நல்ல பிரண்ட்ஸ் அமைவது ரொம்ப கஷ்டம். அது எனக்கு அமைஞ்சிருக்கு.
பெங்களூர் அபார்ட்மெண்ட்ல நிறைய புறாக்கள் இருந்தது. அதோட எச்சில் தான் என் கணவருக்கு சில பிரச்சனைகள் வந்தது. அதன்பிறகு கோவிட் வந்ததுக்குப் பிறகு தான் நிறைய பிரச்சனை வந்தது.
உறுப்பு தானம் நாம நினைக்குற மாதிரி கிடையாது. அதுக்கு நிறைய மேட்ச் இருக்கணும். ரிஜிஸ்டர் பண்ணனும். மெடிக்கல்லயும் நிறைய விஷயங்கள் இருக்கு. அப்போ தான் நினைச்சேன். இது இவ்ளோ பெரிய விஷயமான்னு….
நான் அப்பவே கண் தானம் செய்துள்ளேன். கண்ணழகு கண்ணழகுன்னு சொல்றதனால இந்த கண்ணு யாருக்காவது இருக்கட்டுமேன்னு பண்ணினேன். இந்த உறுப்பு தானம் பற்றி நிறைய பேருக்கு தெரியாது. இன்னும் நிறைய பேர் தானம் கொடுக்க முன் வரணும். நம்ம பண்ணினா கண்டிப்பா இது நாலு பேருக்காவது தெரியும்.
அப்படின்னு தான் நான் எல்லா உறுப்புகளையும் தானம் பண்ணுனேன். கமல் சாருக்கு அப்புறம் நான் பண்ணிருக்கேன். நாம இருக்கப்போறது இல்ல. அப்புறம் எதுக்கு நாம அதைப்பத்திக் கவலைப்படணும்? நம்மோட உறுப்பு அடுத்தவங்களுக்காவது பயன்படட்டுமே..
என் கணவரோட சடங்குகளை நான் பண்ணும்போது என்னைச் சுற்றி என்ன நடக்குதுன்னே எனக்குத் தெரியாது. நான் செய்றதுல நிறைய விமர்சனம் வந்தது. இதுல மத்தவங்களுக்கு என்ன பிரச்சனை? இது ஒரு விவாதமா, நியூஸா வரும்னு நான் நினைக்கல. அவருக்கு என்ன பிடிக்கும்…பிடிக்காதுன்னு என்னை விட வேற யாருக்குத் தெரியும்.
மத்தவங்க மனசைக் கஷ்டப்படுத்தாம உங்களுக்கு என்ன தோணுதோ அதை செய்யலாம்னு தான் நான் நினைக்கிறேன். தப்பு பண்ணாத வரைக்கும் ஓகே. எனது கணவர் ஒரு தொலைநோக்குப் பார்வை உடையவர். எங்க அப்பா இருக்கும்போது எனக்கு மருமகன் இருக்காங்க. அவரு தான் எல்லாம் பண்ணனும்னு என்கிட்ட சொன்னாரு.
நைட்ல நகம் வெட்டக்கூடாதுல்லன்னு கேட்டா அது கிடையாது. அந்தக்காலத்துல லைட் இல்ல. நகம் வெட்டிக் கீழே விழுந்துடுச்சுன்னா குழந்தைகள் கால்ல பட்டு ரத்தம் வந்துடக்கூடாதுன்னு அப்போ நைட்ல நகம் வெட்டக்கூடாதுன்னு சொன்னாங்க. இப்ப தான் லைட் இருக்கே. அந்தக்காலத்துல என்ன பண்ணக்கூடாதுன்னு சொன்னாங்களோ அதுக்கு ஒரு ரீசன் இருக்கும்.
அது அந்தக் காலத்துக்கு செட் ஆகியிருக்கும். இப்ப இந்தக்காலத்துல நிறைய முன்னேற்றங்கள் வந்ததுனால நமக்கு தேவையில்லை. சில பேருக்கிட்ட எப்படிப் புரிய வைக்கிறதுன்னு தெரியலன்னு சொல்வேன். ஏன் சொல்றதுல என்ன தப்பு. தைரியமா சொல்லு. இப்படி சொல்லு. அப்படி சொல்லுன்னு சொல்லிக்கொடுப்பாரு எனக்கு.
இவங்க இதுதான் பண்ணனும். இவங்க இது பண்ணக்கூடாதுன்னு அந்த மாதிரி எல்லாம் கிடையாது. எல்லாருமே மனிதர்கள் தான். எல்லாருமே இந்த உலகத்துல வர்றோம். எல்லாருமே ஒருநாள் இந்த உலகத்தை விட்டுப் போகப்போறோம். ஆண், பெண், குழந்தைன்னு பிரிச்சிருக்காங்களே தவிர மற்றபடி ஒண்ணுமில்ல.
எல்லாருக்கும் சம உரிமைங்கறது இருக்குன்னு நினைச்ச ஒரு நல்ல மனிதர். அதனால எனக்கும் வந்து இது செய்யணும். இது செய்யக்கூடாதுங்கறது எல்லாம் கிடையாது. நான் என் கணவருக்கு இறுதிச்சடங்கு செய்றேன். இப்ப நானும் அவரு மாதிரியே செட்டாயிட்டேன். அந்தக்காலத்துல எது பண்ணினாங்களோ அதுக்கு ஒரு ரீசன் இருந்துருக்கும். அது அந்த டைமுக்கு செட்டாயிருக்கும்.
இப்ப வந்து நிறைய முன்னேறியிருக்கும் நிலையில் பாகுபாடு பெரிசா இருக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன். எல்லாரும் பெரிசா வாயிலயே சொல்லி பிரயோஜனம் இல்ல.. அதுபடி பண்ணி வாழணும். அப்படி இருந்தா தான் அதுக்கு ஒரு மரியாதை.
தற்போது மீனா குழந்தை நைனிகாவுடன் தனியாக வசித்து ரொம்பவே கஷ்டப்படுகிறாராம்.. இதற்காக மறுமணம் செய்து கொள்ள பெற்றோர் வற்புறுத்தியதாகவும், சிறிது யோசனைக்குப் பிறகு சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் அழகான லுக்குடன் மீனாவின் பக்கத்தில் பல புகைப்படங்கள் வந்தவண்ணம் உள்ளன.
இவர் கடைசியாக நடித்த படம் வெற்றி கொடி கட்டு. இந்நிலையில் மீண்டும் நடிப்பாரா என்பதைப் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.