மீனா டப்பிங் பேசிய ஒரே படம்!.. அதுவும் இந்த நடிகைக்கா?.. ஏன்னு தெரிஞ்சா அசந்திருவீங்க..
தமிழ் சினிமாவில் 90களில் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை மீனா. அதற்கு முன் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்தாலும் கதாநாயகியாக பல நெஞ்சங்களில் ஆட்டம் போட்டவர். சிவாஜி நடித்த நெஞ்சங்கள் படத்தில் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக மீனா அறிமுகமானார்.
ஆனால் அந்தப் படத்தில் அவரின் நடிப்பு அந்த அளவுக்கு பேசப்படவில்லை. அதன் பிறகு தான் ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்த ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் தன் கண்ணாலேயே நடிப்பை வெளிப்படுத்தி பல பேர் இதயங்களை அப்பவே கொள்ளையடித்தார் மீனா. ஆனால் அப்பொழுது யாருக்கும் தெரிந்திருக்காது, ஏன் மீனாவுக்கே தெரிந்திருக்காது ரஜினி கூட சேர்ந்து பட்டையை கிளப்ப போறோம் என்று.
அதனை தொடர்ந்து ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைத்து முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்தார். நடிப்பில் பல வெரைட்டிகளை காட்டும் நடிகையாக மீனா மாறினார். அழுது ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார், சிரிக்க வைத்து பல பேரை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கவும் செய்தார்.
அதே போல விஜய் நடித்த படத்தில் ஒரே ஒரு பாடலில் குத்தாட்டம் போட்டு ஆட்டம் போட்டார். அந்தப் பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஹிட் ஆனது. இத்தகைய பெருமையுடைய மீனாவை கௌரவப்படுத்தும் வகையில் இன்று மீனா 40 என்ற பிரம்மாண்ட விழாவை சென்னையில் நடத்தி கௌரவப்படுத்தியிருக்கின்றனர் திரையுலகினர்.
இதையும் படிங்க : ரஜினியுடன் நடிக்க மாட்டேன்.. இயக்குனரிடம் கறாரா சொன்ன கமல்ஹாசன்!.. காரணம் இதுதானாம்!…
இந்த நிலையில் மீனாவின் வாழ்க்கையில் ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் டப்பிங் பேசியிருக்கிறாராம். அதுவும் சேரன் படமான ‘பொக்கிஷம்’ திரைப்படத்தில் நடிகை பத்மபிரியாவிற்காக டப்பிங் பேசியிருக்கிறாராம். அதற்கு காரணம் மீனாவின் கெரியரிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த படங்களான பாரதி கண்ணம்மா மற்றும் பொற்காலம் ஆகியவை சேரன் இயக்கத்தில் வந்தவை. அந்த நன்றிக்காக கூட பொக்கிஷம் படத்திற்காக மீனா டப்பிங் பேசியிருக்கலாம் என சித்ரா லட்சுமணன் கூறினார்.