அந்த படங்களை பார்க்கும் போது நான் படுற கஷ்டம்?.. மீனா தவறவிட்ட ப்ளாக்பஸ்டர் திரைப்படங்கள்!..

by Rohini |   ( Updated:2023-03-31 08:15:42  )
meena
X

meena

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் அனைத்து நடிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை மீனா. கிட்டத்தட்ட 90கள் கால சினிமாவை தன் அழகாலும் நடிப்பாலும் முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டவர் தான் மீனா. அனைத்து முன்னனி நடிகர்களின் சரியான ஜோடியாகவும் மீனா கருதப்பட்டார்.

ரஜினி, கமல், பிரபு, கார்த்திக், சத்யராஜ், முரளி, பார்த்திபன், அஜித், என அனைவருடனும் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார் மீனா. அனைத்து நடிகர்களும் நடித்த மீனா இதுவரை விஜய்க்கு ஜோடியாக மட்டும் நடித்ததில்லை. ஷாஜகான் படத்தில் அமைந்த ‘சரக்கு வச்சிருக்கேன்’ என்ற ஐட்டம் பாடலுக்கு மட்டும் விஜய்க்கு ஜோடியாக ஆடியிருப்பார்.

ஆனால் முழு ஸ்கீரினை விஜயுடன் பகிர்ந்து கொண்டது இல்லை. இந்த நிலையில் மீனாவின் கால்ஷீட்டால் பல முக்கிய படங்களை அவரை விட்டு பறிபோயிருக்கிறது. தவறிய அனைத்துப் படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் படங்களாகும்.

முதலில் கமலின் நடிப்பில் வெளியான தேவர் மகன் திரைப்படம். இந்த திரைப்படத்தில் ரேவதிக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது மீனாதானாம். இரண்டு நாள்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட மீனாவுக்கு மூன்று விதமான லுக் டெஸ்ட் எடுத்துப் பார்த்திருக்கின்றனர். ஆனால் எதுவுமே செட் ஆகவில்லையாம். அதனாலேயே தேவர் மகன் படம் அவரை விட்டு போனது.

அடுத்ததாக ரஜினி நடிப்பில் வெளியான படையப்பா. இந்த படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியதே மீனாதானாம். ஆனால் மீனாவின் அம்மாவின் வற்புறுத்தலினால் தான் படையப்பா படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். அதாவது ரஜினியின் பெஸ்ட் ஜோடி என்று பெயர் வாங்கிய மீனா அவருக்கு எதிரான கதாபாத்திரத்தில் நடித்தால் மீனாவின் இமேஜ் போயிடும் என்ற காரணத்தினால் அவரின் அம்மா வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம்.

அதன் பின் விஜய் நடித்த ஃபிரெண்ட்ஸ் திரைப்படம். இந்தப் படத்தின் ஒரிஜினல் வெர்சன் மலையாள ஃபிரெண்ட்ஸ் படத்தில் மீனாதான் நடித்தாராம். அதனால் தமிழிலும் அவரையே அணுகியிருக்கின்றனர். ஆனால் தேதி க்ளாஷ் ஆனதால்
நடிக்காமல் போயிருக்கிறது.

அடுத்ததாக அஜித் இரட்டை வேடங்களில் கலக்கிய படமான வாலி திரைப்படம். இந்தப் படத்தில் சிம்ரன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியது மீனாதானாம். அதுவும் கால்ஷீட் பிரச்சினையால் நடிக்க முடியாமல் போயிருக்கிறதாம். இப்படி தமிழ் சினிமாவில் இரட்டை துருவங்களாக இருக்கும் ரஜினி-கமல், அஜித்-விஜய் ஆகியோரின் இந்த படங்களை பார்க்கும் போது ஐய்யயோ என்று நினைப்பேன் என்று மீனா கூறினார்.

இதையும் படிங்க : அந்த நடிகருக்காகவே எழுதினேன். ஆனா சிம்பு நடிச்சார்!. விடிவி ரகசியம் சொன்ன கவுதம் மேனன்!…

Next Story