Connect with us
meena

Cinema News

நீங்க பிஸியான நடிகைனு தெரியும்.. அதுக்கு இதுக்கெல்லாம ஆள் வைப்பீங்க! மீனாவின் அட்ராசிட்டி

Actress Meena: கோலிவுட்டில் 90கள் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை மீனா. ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக ஏகப்பட்ட படங்களில் நடித்திருந்த மீனா ஹீரோயினாக நான்கு மொழிகளிலும் நடித்திருக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி சினிமாக்களில் ஒரு டாப் ஹீரோயினாக வலம் வந்தார் மீனா.

குழந்தை நட்சத்திரமாக அவர் யார் யாருக்கெல்லாம் மகளாக நடித்திருந்தாரோ அதே ஹீரோக்களுக்கு பின்னர் ஹீரோயினாகவும் நடித்தார். ரஜினி, பிரபு, சத்யராஜ், கமல் ,பாலகிருஷ்ணா இவர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். பின்னர் அவர்களுடன் ஹீரோயினாகவும் ஜோடி சேர்ந்து நடித்தார். இவர்களில் ரஜினி மீனா ஜோடி தான் ரசிகர்கள் அதிகளவு ரசிக்கப்பட்ட ஜோடியாக பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: ரஜினி பாட்டைப் பாடியதற்காக வருத்தப்பட்ட எஸ்பிபி… அப்படி என்னதான் நடந்தது?

ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடித்த அத்தனை படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட். சினிமாவிற்கு வந்து 40 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் மீனா அதே பொலிவுடன் அதே ஒரு மார்க்கெட் லெவலுடனும் இருந்து வருகிறார். தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மீனா.

இந்த நிலையில் அவருடைய பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் சொன்ன ஒரு தகவல் மிகவும் ஆச்சரியப்படுத்தியது. அதாவது நான்கு மாநிலங்களில் இருந்தும் மீனாவுக்கு அந்த காலகட்டத்தில் நிறைய கடிதங்கள் வருமாம். மூட்டை மூட்டையாய் வந்து இறங்குமாம். அப்போது அந்த கடிதங்கள் எல்லாவற்றையும் பார்த்து படித்து ரசிகர்களுக்கு அவருடைய போட்டோவை அனுப்பவும், அந்த கடிதத்தில் அட்ரஸ் எழுதுவதற்காகவும் தனியாக ஒரு ஆளை அப்பாயின்மென்ட் செய்து வைத்திருந்தாராம் மீனா.

இதையும் படிங்க: ஒன்னு ரெண்டு இல்ல.. விஜயுடன் பல முறை சேர்ந்து டூயட் ஆடிய நடிகைகளின் லிஸ்ட்.. ஐயோ சிம்ரன் நீங்கதான் பெஸ்ட்

அதில் சீனி பிரியா என்ற ஒரு ரசிகையின் பெயரை மீனு பிரியா என அந்த ரசிகை மாற்றிக் கொண்டாராம். இப்போது வரைக்கும் இந்த ஒரு ரசிகை தான் மீனாவிடம் மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறாராம். மீனா 40 நிகழ்ச்சியில் கூட இந்த ரசிகை கலந்து கொண்டிருந்தாராம்.

google news
Continue Reading

More in Cinema News

To Top