சிறு வயது முதல் தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை மீனா. அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் துவங்கி அதிக ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார் நடிகை மீனா. அதேபோல மிகச் சிறிய வயதிலேயே கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு வர அறிமுகமானார்.
1991 ஆம் ஆண்டு மீனா கதாநாயகியாக நடித்த முதல் முதலாக வெளிவந்த திரைப்படம் என் ராசாவின் மனசிலே. இந்த படத்தில் நடிக்கும்போது மீனாவிற்கு 15 அல்லது 16 வயதுதான் இருக்கும். இயக்குனர் கஸ்தூரி ராஜா இந்த படத்தை இயக்கினார். மிக சிறு வயதிலேயே பெரிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார் மீனா. அதிலும் கர்ப்பமான பெண்ணாக நடிக்க வேண்டி இருந்தது.
ஆனால் மீனா மிகவும் சிறு பெண்ணாக இருந்தாலும் கூட அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்திருந்தார். நடிகர் ராஜ்கிரண் இதுக்குறித்து கூறும்போது, படத்தில் மட்டும்தான் மீனா என்னை பார்த்து பயந்ததாக பலரும் நினைத்து கொண்டுள்ளனர். ஆனால் நிஜத்திற்கே ரோஜா என்னை பார்த்து வெகுவாக பயந்தார்கள். படப்பிடிப்பு துவங்கியது முதல் படம் முடியும் வரை அவர் என்னிடம் பேசவே இல்லை.
படப்பிடிப்பில் வந்த சங்கடம்:
அதே போல சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த கூடியவர் மீனா. எந்த ஒரு சூழ்நிலையிலும் நடிக்க தயாராகிவிடுவார். அப்போதெல்லாம் கேரவான் போன்ற வண்டிகள் கிடையாது. ஒரு முறை பாடலுக்காக ஆடையை மாற்ற வேண்டி இருந்தது.
உடனே ரோட்டோரமாக காரை நிறுத்தி அதன் மறைவில் நின்று ஆடையை மாற்றிக்கொண்டு வந்தார் மீனா. இப்போது உள்ள நடிகைகளிடம் அதையெல்லாம் நாம் எதிர்பார்க்கவே முடியாது. அப்படி நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தவர் மீனா என கூறியுள்ளார் ராஜ்கிரண்.
நேற்று சோசியல்…
தனது தந்தை…
Sun serials:…
தமிழக வெற்றிக்கழகம்…
தமிழ் சினிமாவில்…