Actress Meera Chopra: சினிமாவில் பொதுவாக நடிகைகள் சில கண்டிஷன்களை வைப்பது வழக்கம்தான். ஆனால் எந்தவொரு நடிகையும் சினிமாவில் அறிமுகமான உடனேயே டிமாண்ட் வைப்பது இல்லை. ஒரு சில நடிகைகள் மார்க்கெட்டில் பிரபலமாவதற்கு முன்னாடியே தான் நடிக்கும் படங்களில் தனக்கு இவ்வளவு வசதிகளை செய்து தருமாறு பல விஷயங்களை முன் வைக்கின்றனர்.
தமிழில் அன்பே ஆருயிரே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை மீரா சோப்ரா. இவர் தமிழ், தெலுக்கு, ஹிந்தி என பல மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவரை தமிழ் சினிமா ரசிகர்கல அந்த அளவிற்கு ஏற்று கொள்ளவில்லை என்றுதான் கூறவேண்டும்.
இதையும் வாசிங்க:பிரேமம் பட இயக்குனருக்கு இப்படி ஒரு திடீர் பாதிப்பா..? அரிய வகை பிரச்சனையை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்
இவர் மேலும் காளை, ஜெகன் மோகினி, இசை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவருக்கு இவர் நடித்த தமிழ் படங்கள் அனைத்துமே கைகொடுக்கவில்லை. நடிகர் பிரசாந்துடன் இணைந்து இவர் நடித்த திரைப்படம்தான் ஜாம்பவான். இத்திரைப்படம் பெரிதளவில் வெற்றிப்படமாக அமையவில்லை.
இப்படத்தினை இயக்குனர் ஏ.எம்.நந்தகுமார் இயக்கினார்.மேலும் இப்படத்தினை தயாரிப்பாளர் ராஜா தயாரித்திருந்தார். அப்போது இப்படத்தில் குற்றாலத்தில் அருவியில் குளிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றதாம். அப்போது படக்குழுவினர் அனைவரும் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது குற்றாலத்தில் வரும் தண்ணீரை பார்த்த மீரா சோப்ரா இந்த தண்ணீர் மிகவும் அழுக்காக உள்ளது. இதில் என்னால் நடிக்க முடியாது என கூறிவிட்டாராம். மேலும் மினரல் வாட்டரை கொண்டு வந்து நிரப்பினால் நடிப்பதாக கூறியுள்ளார்.
இதையும் வாசிங்க:இதென்ன லிப் லாக்? சிம்புவும் த்ரிஷாவும் அந்த சீனில் பண்ணிய அட்டகாசம் இருக்கே? உணர்ச்சிவசப்பட்டு என்னாச்சு தெரியுமா?
ஆனால் அது குறைந்த பட்ஜெட் படம் என்பதால் இயக்குனர் அவ்வாறெல்லாம் செய்து தர முடியாது என கூறிவிட்டாராம். பின் அங்கிருந்து மீரா சோப்ரா கோபமாக கிளம்பிவிட்டாராம். பின் படத்தின் தயாரிப்பாளர் மீராவிடம் சென்று கொஞ்சம் பொறுத்து போகுமாறு கேட்டுள்ளார். ஆனால் குற்றாலத்தின் பக்கத்தில் ஹோட்டலில் தங்கியிருந்த மீரா சோப்ரா காரை வரவழைத்து கிளம்பி சென்றுவிட்டாராம்.
பின் போகின்ற வழியில் மதுரை விமான நிலையத்தில் வைத்து தயாரிப்பாளர் தன்னை பாலியல் தொந்தரவும் செய்ததாக பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார். இதனால் தயாரிப்பாளர் மிகுந்த வேதனையடைந்துள்ளார். அப்போது இப்படத்தின் இயக்குனரான நந்தகுமார் பத்திரிக்கையாளர்களிடம் அவ்வாறு ஏதும் நடக்கவில்லை எனவும் அப்பெண் பொய் கூறுவதாகவும் கூறிவிட்டாராம். பின் எஸ்.ஜே.சூர்யாவிடம் பேசி அந்த நடிகையை திரும்ப வரவழைத்தனராம். பின் குற்றாலத்தில் எடுக்க வேண்டிய காட்சிகளை படக்குழு பாங்காக்கில் வைத்து எடுத்ததாக படத்தினை இயக்கிய இயக்குனர் நந்தகுமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிங்க:இது தான் கெட்ட நேரமோ..! 4 லட்சத்தினை உடனே கட்ட முடியாமல் திணறும் அண்ணாமலை குடும்பம்..!
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…