‘மறு வார்த்தை பேசாதே’ பாடல் புகழ் மேகா ஆகாஷ் யாரை திருமணம் செய்யப் போறாங்க தெரியுமா?
இப்போது இணையத்தில் வைரலாகும் செய்தி என்னவென்றால் பிரபல இளம் நடிகையான மேகா ஆகாஷ் ஒரு தமிழ்நாட்டின் அரசியல் பிரபலத்தின் மகனை திருமணம் செய்யப் போவதாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேகா ஆகாஷ் தனுஷ் நடிப்பில் வெளியான எண்ணெய் நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தில் நடித்தவர்.
மேலும் அந்தப் படத்தில் அமைந்த மறு வார்த்தை பேசாதே என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலமானார். ஆனால் அவர் முதன் முதலில் ரஜினி நடித்த பேட்ட என்ற படத்தின் மூலம்தான் அறிமுகமானார் .அதில் சிம்ரனுக்கு மகளாக நடித்திருப்பார் மேகா ஆகாஷ். அதன் பிறகு சிம்புவின் நடிப்பில் வெளிவந்த வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார்.
அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படத்திலும் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரன் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்றார். ஒரு முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெறாவிட்டாலும் முக்கியமான நடிகர்களுடன் நடித்ததனால் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாகவே மாறினார் மேகா ஆகாஷ்.
இந்த நிலையில்தான் மேகா ஆகாஷ் திருமணம் குறித்து செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 27 வயது உடைய மேகா ஆகாஷ் தமிழ்நாட்டில் ஒரு முக்கிய அரசியல் பெரும் புள்ளியாக இருக்கும் பிரபலத்தின் மகனை திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.
அது குறித்து அதிகாரப்பூர்வமாக செய்தி வெளிவரும் வரை அவர் யார் என்பதை மிகவும் ரகசியமாக வைத்திருக்கின்றனர் .ஆனாலும் இந்த செய்தியை பார்த்த நெட்டிசன்கள் ஒருவேளை இவரா இருக்குமோ அவரா இருக்குமோ என தங்கள் கமெண்டுகள் மூலம் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : லியோ படத்தை பற்றி கிளம்பிய வதந்தி? முற்றுப்புள்ளி வைத்த மூத்த பத்திரிக்கையாளர்!
இது ஒரு பக்கம் இருந்தாலும் மேகா ஆகாஷ் இப்போது சந்தானம் நடிப்பில் தயாராகி வரும் வடுகப்பட்டி ராமசாமி என்ற படத்தில் நடித்து வருகிறார் .அதனை அடுத்து மழை பிடிக்காத மனிதன் என்ற படத்திலும் நடித்திருக்கின்றார்