மீண்டும் இணையும் ரஜினி - நெல்சன்!.. அட ஜெயிலர் பட நடிகையே சொல்லிட்டாங்களே...
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படத்தில் ரஜினி முக்கிய வேடத்தில் நடிக்க, வில்லனாக மலையாள நடிகர் வினாயகன் நடித்திருந்தார். மேலும், ரம்யா கிருஷ்ணன், மிர்னா, வசந்த் ரவி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
ரஜினிக்கு தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் கை கொடுக்காத நிலையில் இந்த படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஒருபக்கம், இந்த படத்திற்கு முன் நெல்சன் இயக்கி வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு திருப்தியாக அமையவில்லை. எனவே, ரஜினியோடு கூட்டணி அமைத்ததால் படம் வெற்றி பெறுமா என்கிற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டது.
இதையும் படிங்க: 70 கோடி பட்ஜெட்டில் சிவகார்த்திகேயன் சம்பளம் இவ்வளவா? படம் தரமா வருமா? புலம்பும் திரையுலகம்
ஆனால், கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியதே இப்படத்திற்கு பெரிய புரமோஷனாக அமைந்தது. அதோடு, அனிருத்தின் இசையும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது.
ஜெயிலர் படம் 500 கோடிக்கும் வசூல் செய்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு நல்ல லாபத்தை கொடுத்தது. இதைத்தொடர்ந்து ரஜினிக்கும், நெல்சனுக்கும் விலை உயர்ந்த காரை சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் பரிசாக கொடுத்தார். இந்த படத்தின் வெற்றி கொடுத்த உற்சாகத்தில் ரஜினி வேட்டையன் படத்தில் நடிக்கப்போனார். அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள படத்திலும் அவர் நடிக்கவிருக்கிறார்.
இதையும் படிங்க: டான்ஸ் கைவந்த கலை! அப்புறம் ஏன் பாட்டுனதும் ஓடிட்டாரு? கமல் நடிக்க மாட்டேனு சொன்ன படம் எதுனு தெரியுமா
பொதுவாக ஒரு படம் சூப்பர் ஹிட் அடித்தால் அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பது இப்போது அதிகரித்துவிட்டது. எனவே, ஜெயிலர் 2 படம் உருவாகுமா என்கிற எதிர்பார்ப்பு ரஜினி ரசிகர்களுக்கு இருக்கிறது. இந்நிலையில், ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த மிர்னா ஜெயிலர் 2 படம் பற்றி சில முக்கிய தகவல்களை சொல்லி இருக்கிறார்.
ஜெயிலர் 2 படம் பற்றி நெல்சன் சாரிடம் கேட்டேன். அதற்கான கதையை எழுதி வருவதாக சொன்னார். எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. ஜெயிலர் 2-வில் நான் இருப்பேனா என்பது எனக்கு தெரியாது. கதையை விரிவுபடுத்தினால் கண்டிப்பாக நான் அதில் நடிப்பேன். அதேநேரம், அது இயக்குனரின் முடிவை சார்ந்தது’ என சொல்லி இருக்கிறார்.