லட்டு மாதிரி 2 நடிகைகளை தட்டி தூக்கிய அட்லி!.. அல்லு அர்ஜூனுக்கு செம லக்குதான்!….

by சிவா |   ( Updated:2025-05-02 08:51:36  )
aa22
X

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளர்களில் முக்கியமானவர் அட்லி. ஏனெனில், ஷங்கரிடம் உதவியாளர்களாக இருந்து இயக்குனர்களாக மாறியவர்களில் அட்லி போல் யாரும் உச்சம் தொட்டது இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஷங்கரை விட அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராகவும் இப்போது அட்லி மாறிவிட்டார்.

ராஜா ராணி படத்தில் அறிமுகமான அட்லி அதன்பின் விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார். அந்த படங்களுக்கு பின் பாலிவுட் பக்கம் போய் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். அந்த படம் 1300 கோடி வசூலை பெற்று சாதனை படைத்துவிட்டது. அந்த படத்திற்கு பின் இதுவரை பல ஹிந்தி படங்கள் வெளியாகிவிட்டாலும் அந்த வசூலை எந்த படமும் பெறவில்லை.

அதையடுத்து அடுத்து எந்த நடிகரை வைத்து அட்லி படம் இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது. ரஜினி, கமல், சல்மான்கான் என பலரின் பெயரும் இதில் அடிபட்டது. ஆனால், அல்லு அர்ஜூன் நடிக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அட்லி படம் இயக்குகிறார் என்கிற அப்டேட் சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக வெளியானது.

mirunal

அதோடு, ஹாலிவுட் சூப்பர் ஹீரோ ஸ்டைலில் இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் பல ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி வருகிறார்கள். இப்படத்தின் கதையையே ஹாலிவுட் கதாசிரியர் ஒருவருடன் இணைந்தே அட்லி எழுதியிருக்கிறார். எனவே, இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இந்த படத்தில் ஹிந்தி பட நடிகை பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிக்கிறார் என செய்திகள் வெளியானது. ஆனால், இப்போது அவர் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அவருக்கு பதிலாக மிர்னள் தாக்கூரிடம் பேசி வருகிறார்களாம். எல்லாம் ஓகே ஆனால், அவரே இந்த படத்தில் நடிக்க வாய்ப்பிருக்கிறது. மேலும், இன்னொரு வேடத்திற்கு ஜான்வி கபூரிடமும் பேசி வருகிறார்களாம். விரைவில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்கிற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story