நடிகை மோகினி ஈரமான ரோஜாவே படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கவர்ந்தவர். 1991ல் வெளியானது. இளையராஜாவின் இசையில் பாடல்கள் சக்கை போடு போட்டது. இந்தப் படத்திற்குக் கதை எழுதி இயக்கியவர் கேயார்.
திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளது. 10 வருஷத்துக்கு முன்னாடி அமெரிக்கால போய் செட்டில் ஆகிட்டோம்.
முதல் படம் பண்ணும்போது 9ம் வகுப்பு முழு ஆண்டு விடுமுறை. 30 வருடமாகிவிட்டது. ஆனால் அப்படி தெரியவில்லை.
இயற்பெயர் மகாலெட்சுமி. முதல் பட டைரக்டர் கேயார். சார் தான் மோகினின்னு பேரு வைச்சாரு. மோகினி பிசாசு பிசாசுன்னு கேலி பண்ணாங்க.
கமல் மனைவி சரிகா மாதிரி என் கண்கள் இருக்குன்னு சொல்வாங்க. எல்லா கலரும் உங்க கண்ணுல இருக்குன்னு சொல்வாங்க.
நடிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் இவ்ளோ படங்கள் தான் நடிக்கணும்னு ஒண்ணும் கிடையாது. படம் நல்லா வந்தா நடிப்பேன். இல்லேன்னா வீட்டுல இருப்பேன். இல்லையா பள்ளிக்குப் போவேன். நம்பர் ஒன்னில் எனக்கு நம்பிக்கை இல்லை.
ஒரு வருடத்தில் 5 மொழிகளில் நடிச்சேன். இந்தி தவிர மற்ற 4 மொழிகளில் எனது முதல் படம் 100 நாள்களைக் கடந்து ஓடியது.
அக்ஷய் குமார் உடன் இந்தி படத்தில் நடிச்சதை மறக்க முடியாது. அவர் ஒரு எளிமையான மனிதர். கடின உழைப்பாளி.
கேயாருக்கு மட்டும் தான் திறமை இருந்தது. என்னை நீச்சல் உடையில் நடிக்க வைப்பதற்கு. இதைப் போடலைன்னா இவ்ளோ நஷ்டமாயிடும்னு சொன்னார். எனக்கு வந்து ஒரே டேக்கில் எடுக்க வேண்டும்.
ஒரே ஒரு பாடல் மட்டும் நான் சொதப்பப் போறேன்னு நினைச்சேன். அது நீ கட்டும் சேலை மடிப்புல நான் பாடல். அந்தப் படம் எனக்கு ரொம்பப் பிடிச்சது. நாளை பொள்ளாச்சி போகப்போறேன்னா நான் விக்ரமன் சார்ட சொல்றேன். இந்த சாங் எனக்கு செட்டாகாது.
நான் கிளாசிக்கல் டான்சர். எனக்கு நாட்டுப்புற நடனம் வராது. என் கண்ணு வேற இப்படி இருக்குன்னு புலம்பிக்கிட்டே இருந்தேன். ஆனா விக்ரமன் சார் தான் உங்களுக்கு இதைப் பற்றித் தெரியாது. நீங்க பண்ணிப் பாருங்கன்னாரு. 100 படங்கள் நடிச்சிருக்கேன். இது நான் கணக்குப் போட்டது.
கடவுள் கிருபையில் நல்ல கணவர் கிடைச்சாரு. உடனே குழந்தை பிறந்தது. எனக்கு குழந்தைகளை வேலை செய்யுற ஆள்கிட்ட கொடுத்து வளர்க்குறது எனக்குப் பிடிக்காது. என்னை வளர்த்தது எல்லாமே வேலைக்காரங்க தான். அதனால நான் விவரம் தெரிஞ்சதும் நம்மளே குழந்தைகளை வளர்க்கணும்னு நெனைச்சேன்.
முதல் குழந்தை அனிருத் பிறந்து 2 வருஷங்கள்ல எனக்கு மாமியார் ரோல் கிடைச்சது. அது எந்த ஹீரோன்னு சொல்ல மாட்டேன். அந்த ரோலை சீதாக்கா பண்ணாங்க. அப்போ அந்த ஹீரோக்கிட்ட போய் சொல்ல சொன்னேன்.
சார் நான் 60 வயசு ஆகும்போது நீங்க ஹீரோவா நடிச்சிக்கிட்டு இருந்தீங்கன்னா உங்களுக்கு மாமியார் ரோல் பண்றேன்னு சொன்னேன். அவரு சிரிச்சிருப்பாரு போல.
எனக்கு வந்து போலீஸ் வேடத்தில் நடிக்கணும்னு ஆசை. நாலு குத்து, 2 உதை கொடுக்கணும்னு ரொம்ப ஆசை. அந்த ரோல் எனக்குக் கிடைக்கவே இல்லை.
நீங்க நல்ல ஒரு மனிதாபிமானமான நபரா இருந்தால் மட்டும் தான் மக்கள் ஞாபகம் வச்சிருப்பாங்க. கேமரா முன்னாடி தான் நீ நடிக்கணும். வீட்ல கூப்பிடுற பேரு மஞ்சு. இப்படி சொல்லி வளர்த்ததனால எனக்கு பாதி நேரம் நடிகைன்னு ஞாபகமே இருக்காது.
விஜய் சேதுபதி. அமேசிங். அவரைப் பொறுத்தவரைக்கும் எந்தப் பந்தாவும் இல்லாதவர். நான் விஜய் சேதுபதி படத்துல நடிக்கிறேன். அவர் பாட்டுக்கு ஒரு தாடி வச்சிக்கிட்டு இன்டர்வியு கொடுக்குறாரு. அவரோட தோற்றம் எப்படி இருந்தாலும் கொடுக்குற கன்டன்ட் வந்து டெப்த்தா இருக்கு. அடுத்து தனுஷ். அடுத்து விஜய் ரொம்பப் பிடிக்கும்.
என்னைப் பற்றி ரொம்ப கிசுகிசு வரவே இல்லையேன்னு நானே ஒரு சமயம் வருத்தப்பட்டு இருக்கேன். கம்பேக்னா நல்ல ரோல்…பவர்புல் ரோலா இருக்கணும். ஒரே சீனா இருந்தாலும் நல்ல ரோல்னா நாளைக்கே நடிக்கத் தயார்.
NEEK Movie:…
Nayanthara dhanush:…
நடிகர் அஜித்தின்…
நடிகர் அஜித்தின்…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின்…