அவருக்கா இந்த நிலமை?.. சீரியலில் நடிக்கப்போன விஜய் பட நடிகை..
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் மின்சார கண்ணா. இந்த திரைப்படம் 1999ம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் மும்பையை சேர்ந்த மோனிகா கேஸ்ட்டிலினோ விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.
மேலும், குஷ்பு, ரம்பா, மணிவண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஆனால், இப்படம் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. எனவே, இப்படத்திற்கு பின் ரவிக்குமார் - விஜய் கூட்டணி மீண்டும் இணையவில்லை.
இப்படத்தில் நடித்த மோனிகா தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவில்லை. மேலும், பாலிவுட்டில் சில படங்களில் நடித்த அவர் ஒரு உதவி இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும், தன் கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பின் அவரை பிரிந்தார். தற்போது சில ஹிந்தி சீரியல்களில் அவர் நடித்து வருகிறார்.
தற்போது ஆண்ட்டி போல் மாறியிருக்கும் அவரை பார்க்கும் ரசிகர்கள் இவரா விஜய்க்கு ஜோடியாக நடித்தது என அதிர்ச்சி அடையும் அளவுக்கு அவரின் தோற்றம் மாறிப்போயுள்ளது.