சினிமாவின் மோகம் என்பது யாரையும் விட்டு வைப்பதில்லை. வேண்டும் என விடாமுயற்சியுடன் இருக்கும் ஒவ்வொருவரையும் எந்த சூழ்நிலையிலும் சினிமா கைவிட்டது இல்லை. எப்படியாவது முன்னேறி தன்னுடைய லட்சியத்தை அடைந்தே தீர்வார்கள். அந்த வகையில் சினிமாவில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் பாலுமகேந்திரா.
பன்முகத்திறமை
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாது இயக்குனராக இருந்தவர் பாலுமகேந்திரா. இயக்குனர் என்பதையும் தாண்டி ஒளிப்பதிவாளராக இருந்து எண்ணற்ற படங்களை நம் கண்முன் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். வசனகர்த்தாவாக, ஒளிப்பதிவாளராக, தயாரிப்பாளராக என பல துறைகளில் இருந்து இருக்கிறார்.
சினிமா கெரியரில் பல சாதனைகளை படைத்த பாலுமகேந்திராவின் சொந்த வாழ்க்கை மிகவும் சிக்கலாகவே இருந்தது. மூன்று திருமணங்களை செய்தவர் பாலுமகேந்திரா. நடிகை ஷோபாவை திருமணம் செய்தார்.ஆனால் சில பல காரணங்களால் ஷோபா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் அகிலா என்ற பெண்ணை திருமணம் செய்தார்.
மூன்றாவது திருமணம்
ஆனால் அந்த திருமண உறவில் இருக்கும் போதே நடிகை மௌனிகாவை திருமணம் செய்து கொண்டார். 1985 ஆம் ஆண்டில் வெளியான உன் கண்ணில் நீர் வழிந்தால் என்ற படத்தின் மூலம் மௌனிகாவை முதன் முதலில் சினிமாவில் அறிமுகம் செய்கிறார் பாலுமகேந்திரா. பாலுமகேந்திராவின் சினிமா மீது காதல் வயப்பட்ட மௌனிகா அவர் மீதும் காதல் கொள்கிறார்.
30 வயது வித்தியாசத்தில் இருக்கும் பாலுமகேந்திராவுடன் கிட்டத்தட்ட 28 வருடங்கள் ஒன்றாகவே சேர்ந்து வாழ்ந்தார். 2014 ஆம் ஆண்டு பாலு மகேந்திரா இறப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்புதான் இருவரும் பிரிந்தார்களாம். அதற்கு காரணமும் பாலுமகேந்திராதான் என நடிகை மௌனிகா கூறினார்.
பாலுமகேந்திரா எழுதிய கடிதம்
அதாவது பாலு மகேந்திரா மௌனிகாவிற்கு ஒரு கடிதம் எழுதினாராம். அதில் ‘என்னுடைய வயோதிக சுமையை உன்னிடம் திணிக்க விரும்பவில்லை, அதனால் நாம் பிரிந்து விடுவோம்’ என்று எழுதியிருந்தாராம். ஆனால் இதை பற்றி கூறிய மௌனிகா வயோதிகம் என்ற காரணம் எல்லாம் இருந்திருக்காது, என்னை யாராவது எதாவது பண்ணிருவாங்களோ என்ற பயத்தினால்தான் பிரிந்திருப்பார் என்று கூறினார்.
இதையும் படிங்க : சூப்பர் ஹிட் பாடல்! கண்ணதாசனை வற்புறுத்தி எழுத வைத்த தயாரிப்பாளர்
ஆனால் அவர் செஞ்சது தப்புதான். என்னால மன்னிக்கவே முடியாது, ஏன் அவர் ஆன்மாவை கூட மன்னிக்க முடியாது, இப்ப வரைக்கும் எதுவும் எந்த காரணமும் சொல்லாமல் போய்விட்டாரே என்றுதான் கவலையாக இருக்கிறது என்று மௌனிகா கூறினார்.
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…