sivakarthikeyan
sivakarthikeyan

சினிமாவில் தற்போதுள்ள நடிகைகள் விழித்துக் கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆரம்பகாலங்களில் ஒரு படத்திற்கு ஒரு ஹீரோயின் வேண்டும், ஹீரோவுடன் டூயட் பாட ஒரு ஹீரோயின் வேண்டும் என ஹீரோவுக்கு சப்போர்ட் சிஸ்டமாகத்தான் ஹீரோயினை பயன்படுத்தி வந்தார்கள். ஹீரோயின்களும் சரி நமக்கு சம்பளம் வந்துவிடுகிறது என நடித்தும் கொடுத்தார்கள்.

ஆனால் இப்போதுள்ள நிலைமையே வேறு. ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே ஹீரோயின்கள் அந்தப் படத்தை ஒப்புக் கொள்கிறார்கள். அது ரஜினி, விஜய் நடிக்கும் படங்களாக இருந்தாலும் தனக்கு அந்தப் படத்தில் முக்கியத்துவம் இருக்கிறதா என்பதைத்தான் ஹீரோயின்கள் பார்க்கிறார்கள். ஆனால் முன்பெல்லாம் ரஜினி படமா? துணை நடிகை கேரக்டர் இருந்தாலும் நடிக்கிறேன் என்று நடித்துக் கொடுத்த நடிகைகளும் இருக்கிறார்கள்.

ஆனால் இப்போது அப்படியில்லை. அந்த வகையில் சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க இருக்கும் ஒரு புதிய படத்தில் தனக்கு ஸ்கோப் இல்லை என்று கூறி அந்தப் படத்தை ரிஜக்ட் செய்திருக்கிறார் ஒரு நடிகை. அவர் வேறு யாருமில்லை. நடிகை மிருனாள் தாகூர். சிவகார்த்திகேயனை வைத்து பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.

இந்தப் படத்தில் மிருனாள் நடித்தால் நன்றாக இருக்கும் என அவருக்கு கதை சொல்வதற்காக ராம்குமார் பாலகிருஷ்ணன் மும்பை சென்றார். கதையை கேட்ட மிருனாள் இந்தக் கதையில் தனக்கு ஸ்கோப் இல்லை என்று கூறி அந்தப் படத்தை ரிஜக்ட் செய்திருக்கிறார். அதனால் ராம்குமார் பாலகிருஷ்ணன் அந்தப் படத்திற்கு வேறொரு நடிகையை தேடிக் கொண்டிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.