ப்ப்பா என்னா அழகுடா!.. நீ செம கிளாசி!.. சீதா ராமம் பட நடிகையின் க்யூட் கிளிக்ஸ்...
மும்பையை சேர்ந்தவர் மிருனள் தாக்கூர். பாலிவுட் நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வருகிறார். தொலைக்காட்சியில்தான் தனது கேரியரை துவங்கினார்.
சில ஹிந்தி சீரியல்களில் நடித்தார். அதன்பின் ஹிந்தி திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். சில ஆல்பம் வீடியோக்களிலும் நடித்துள்ளார்.
முதலில் மராத்தி மொழி படங்களிலும் நடித்தார். அதன்பின் ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கி இதுவரை பத்துக்கும் மேற்பட்ட ஹிந்தி படங்களில் நடித்துவிட்டார்.
தெலுங்கிலும் நடித்து வரும் மிருனள் தாக்கூர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து வெளியான சீதா ராமம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்போது தமிழிலும் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. தெலுங்கில் நடிகர் நானிக்கு ஜோடியாகவும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.
பாலிவுட் நடிகை என்றால் கவர்ச்சிக்கு சொல்லவே தேவையில்லை. உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் மிரண்டு போய் வருகின்றனர்.
அந்த வகையில், சுடிதாரில் க்யூட்டாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.