எனக்கு அதுக்கு எல்லாம் பயமில்லை... ஆனா அந்த ஒண்ணு தான் இடிக்குது... என்ன சொல்கிறார் மிஸ்கின் பட நடிகை

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க மிஷ்கின் இயக்கி வரும் புதிய படத்தின் பெயர் டிரெய்ன். இந்தப் படத்தில் மாடலிங்கில் இருந்து வந்த நடிகை இரா தயானந்த் ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் அவர் நடிக்க ரொம்பவே ஆர்வமாக உள்ளார் என்பது அவரது பேட்டியில் இருந்து தெரிகிறது.

தெலுங்கு பெண்ணான நான் கர்நாடகாவில் செட்டில் ஆகி உள்ளேன். நான் தெலுங்கில் தான் வீட்டில் பேசுவேன். ஆனால் கன்னடத்திலும் பேசுவேன். ஏன்னா நான் பெங்களூருவில் தான் பிறந்து வளர்ந்தேன். மாடலிங்கில் நுழைந்து பணிபுரிந்தேன். நான் சினிமாவில் நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. இந்தத் துறையைப் பற்றி எனக்கு எந்த ஒரு திட்டமிடுதலும் இல்லை.

ஒருநாள் என் இன்ஸ்டாவில் டைரக்டர் மிஷ்கின் படத்திற்கு ஆடிஷன் உள்ளது. உங்களால் கலந்து கொள்ள முடியுமா என்று அழைப்பு வந்தது. நான் அப்போது பிசியாக இருந்தேன். இதற்காக 2 தடவை பெங்களூருவில் இருந்து சென்னைக்கு பிளைட் புக் பண்ணி கேன்சல் ஆகி விட்டது.

train

train

நான் அந்தப் படத்திற்கான ஹீரோ யார் என்று கேட்கவில்லை. தயாரிப்பாளர் யார் என்று கேட்கவில்லை. அதன்பிறகு 2 நாள்கள் கழித்து தான் எனக்கு அந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்றே தெரிந்தது.

நான் ஏற்கனவே மாஸ்டர் மகேந்திரனுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்துள்ளேன். இந்த டிரெய்ன் படத்தில் நான் ரிப்போர்ட்டராக நடிக்கிறேன். இந்த கேரக்டருக்காக சென்னையில் ஒரு மாதமாகத் தங்கி இருக்கிறேன். எனக்கு தமிழ் தெரியாது. அதனால் தான் சென்னையில் தங்கி தமிழ் கற்று வருகிறேன்.

இதையும் படிங்க... ஓ இப்படிப்பட்டவரா கார்த்திக்? இது தெரியாம வாய்க்கு வந்தபடி பேசிட்டு இருக்காங்களே?

அதனால் எனக்கு தமிழ் இப்போது பேசுவதை நான் புரிந்து கொள்ள முடிகிறது. எனக்கு கேமரா முன் நிற்க பயமில்லை. ஆனால் மொழியை நினைத்தால் தான் பயமாக உள்ளது என்கிறார்.

மிஸ்கின் இயக்கி வரும் டிரெய்ன் படத்தில் விஜய் சேதுபதி, இரா தயானந்த், வினய் ராய், பாவனா, சம்பத்ராஜ், பப்லு பிரித்விராஜ், கே.எஸ்.ரவிகுமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

 

Related Articles

Next Story