நமீதாவோட மறுபக்கத்தை காட்ட போறேன்!.. இப்படி ஒரு ரிஸ்க் தேவையா?..
தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி பின் கவர்ச்சி நடிகையாக மாறியவர் நடிகை நமீதா. தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் என அனைத்து மொழி படங்களிலும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.
விஜயகாந்த் நடித்த ‘எங்கள் அண்ணா’ படம் தான் தமிழில் நமீதா நடித்த முதல் திரைப்படமாகும். அதனை தொடர்ந்து பல பிரபலமான தமிழ் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார் நமீதா. பில்லா படத்தில் நடித்ததன் மூலம் இவரின் நடிப்பு அறியப்பட்டது.
அதுவரை காதல் , கவர்ச்சி என இருந்த நமீதா பில்லா படத்தில் ஒரு பக்கா இண்டலிஜெண்ட் நாயகியாக தன்னை பிரதிபலித்திருப்பார். அதன் பிறகு முழுக்க முழுக்க தன்னை ஒரு மோகினியாக காட்டிய படம் ‘ஜகன்மோகினி’ திரைப்படம். ஆனால் அந்த படம் சரிவர ஓடவில்லை. அதனையடுத்து தனது நீண்ட நாள் நண்பரை தனது வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டார்.
இவர்களுக்கு திருமணமாகி இரட்டைக் குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். இதற்கு இடையில் கொரானா காலத்தில் நமீதா சொந்தமாக ஒரு ஓடிடி தளத்தை உருவாக்கி அதை நல்ல முறையில் நடத்திக் கொண்டிருக்கிறாராம். அது உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கும் படங்களுக்காக மட்டும் இருக்கும் ஓடிடியாம்.
இந்த நிலையில் சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பங்கேற்று பேசிய நடிகை நமீதா ‘பவ் வவ்’ என்ற திரைப்படத்தை அவரே தயாரித்து நடிக்கிறாராம். அதற்கு முழு ஒத்துழைப்பு அவரின் கணவர் தானாம். செல்லப் பிராணிகளை வளர்க்கும் நண்பர்களுக்கான படமாம் .
இதையும் படிங்க : 12 நாட்களில் எடுக்கப்பட்ட படம்… ரிலீஸ் ஆனதும் நொந்துப்போன எஸ்.ஏ.சி… ஏன் தெரியுமா?
இதை பற்றி பேசிய நமீதாவின் கணவர் ‘சினிமாவில் நமீதாவின் ஒரு பக்கம் மட்டுமே காட்டப்பட்டது. முழு பலத்தையும் திறமையையும் இந்தப் படத்தின் மூலம் நீங்கள் காணலாம். நமீதாவா இது? என்று ஆச்சரியப்படுகிற அளவுக்கு இந்தப் படம் அமையும்’ என்று கூறினார். அவர் சூசகமாக சொன்னதை நமீதா குறுக்கீட்டு ஒரு பக்கம் மட்டுமே காட்டப்பட்டது என்று சொன்னதும் இவர் க்ளாமரஸ் என்று பக்கத்தில் இருந்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அதனால் நமீதாவை மக்களிடம் நல்ல முறையில் வெளிப்படுத்த அவர் கணவர் எடுக்கும் ரிஸ்க் தான் பவ் வவ் என்ற திரைப்படம்.