காதல் கணவனை விவாகரத்து செய்கிறாரா நமீதா? எல்லாத்துக்கும் காரணம் அந்த தொழிலதிபர்

Published on: January 19, 2024
namitha
---Advertisement---

Actress Namitha: தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை நமீதா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரான வீரேந்திர சவுத்ரியை காதலித்து 7 ஆண்டுகள் காத்திருந்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகான இரட்டை ஆண்குழந்தைகள் 2022 ஆம் ஆண்டு பிறந்தது.

இவர்கள் திருமணத்திற்கு திரையுலகைச் சார்ந்த முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆனால் இப்போதைய வெளியான தகவலின் படி நமீதா அவரது காதல் கணவரான சவுத்ரியை விவாகரத்து செய்யப் போவதாக சினிமா பத்திரிக்கையாளரான பயில்வான் ரெங்கநாதன் ஒரு சேனலில் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: பல கோடி நஷ்டம் வருமா?!. விக்கியிடம் வசமா சிக்கிய லலித்குமார்!.. கமல் எஸ்கேப் ஆனது சும்மா இல்ல!..

அந்த செய்திதான் இப்போது ஹாட் டாப்பிக்காக பரவி வருகின்றது. அதாவது  நமீதாவுக்கு ஒரு போதை கடத்தல் வியாபாரம் செய்யும் தொழிலதிபருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் அவருடைய லைஃப் ஸ்டைலில் நமீதா மயங்கி விட்டதாகவும் அதன் காரணமாகவே அவரது கணவரை நமீதா விவாகரத்து செய்யப் போவதாகவும் பயில்வான் ரெங்கநாதன் கூறினார்.

குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட நமீதா முதலில் மாடலிங் துறையில் நுழைந்து பிரபலமானார். அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் கால்பதித்து தமிழில் எங்கள் அண்ணா படத்தின் மூலம் விஜயகாந்துக்கு ஜோடியாக அறிமுகமானார்.

இதையும் படிங்க: இதனாலதான் நான் உங்க படத்துல நடிக்கல!. கேள்வி கேட்ட ரஜினியிடம் கேப்டன் சொன்ன நச் பதில்..

அதனை தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த நமீதாவின் மார்கெட் குறையவே ஐட்டம் பாடலுக்கு ஆடுவதை தேர்ந்தெடுத்தார். அதனை தொடர்ந்துதான் அவரது திருமணம் நடந்து இல்லற வாழ்க்கைக்குள் நுழைந்தார்.

அதுமட்டுமில்லாமல் அரசியலிலும் கால்பதித்தார். இதை குறிப்பிட்டு பேசிய பயில்வான் ரெங்கநாதன் என்ன போராட்டம் நடத்தினாரோ தெரியவில்லை. பாஜகாவில் சேர்ந்துவிட்டார் நமீதா என்று கிண்டலடிக்கும் வகையில் கூறினார். ஆனால் இந்த விவாகரத்து விஷயம் உண்மையா இல்லையா என நமீதாவே சொல்ல வேண்டும் என்றும் நமீதாவிற்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் பயில்வான் ரெங்கநாதன்.

இதையும் படிங்க:எலியும் பூனையுமா இருந்து திருமணத்தில் கைகோர்த்த ராம்கி – நிரோஷா! இப்படி ஒரு காதல் கதையா?

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.