குமுதாவுக்கு இப்படி ஒரு கொடிய நோயா? - ஆளே மாறி எப்படி இருக்கிறார் பாருங்க நந்திதா?

by Rohini |   ( Updated:2023-07-20 06:27:42  )
nan
X

nan

அடிப்படையிலேயே கன்னடாவைச் சேர்ந்தவர் தான் நடிகை நந்திதா ஸ்வேதா. முதன் முதலில் கன்னட படமொன்றில் தான் தன்னுடைய சினிமா கெரியரை ஆரம்பித்தார். இருந்தாலும் எல்லா மொழி சினிமாக்களிலும் நடிக்க வேண்டும் என்பதுதான் ஒரு உண்மையான கலைஞனுக்கு இருக்கும் ஆசை. அதே ஆசைதான் நந்திதாவுக்கும் இருந்தது.

nan1

nan1

அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நந்திதா முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்தார். ஒரு எதார்த்தமான கல்லூரி பெண்ணாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்தார். அந்தப் படத்தின் வெற்றி நந்திதாவுக்கு மேலும் மேலும் பட வாய்ப்புகள் வர உதவிக்கரமாக இருந்தது.

இதையும் படிங்க : தமிழ் தெரியாதுன்னு என்ன தூக்கிட்டாங்க!.. ஆனா அந்த ஹீரோ?!.. அவமானப்பட்ட விஜயகாந்த்…

அதனை தொடர்ந்து முண்டாசுப்பட்டி, எதிர் நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். குறிப்பாக இதற்கு தானே ஆசைப்பட்டார் பாலகுமாரா படம் நந்திதாவை பெரிய உயரத்திற்கே அழைத்துச் சென்றது. அந்தப் படத்தில் குமுதாவாக நடித்து இன்று வரை அனைவரும் குமுதா ஹேப்பி என்று கேட்கும் அளவுக்கு பதிந்து இருக்கிறார்.

nan2

nan2

பக்கத்துவீட்டு பெண் போன்ற தோற்றத்தில் இருக்கும் நந்திதா இயல்பாகவே நல்ல திறமையுள்ள நடிகை. ஆனாலும் தமிழில் அவர் எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வரவில்லை. சமீபத்தில் தான் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பு வந்தது. அந்தப் படத்தின் புரோமோஷனில் கூட கலந்து கொண்டு பேசினார் நந்திதா. அப்போது யாரும் எதிர்பார்க்காத ஒரு செய்தியை பகிர்ந்தார்.

அதாவது கிட்டத்தட்ட மூன்று வருடமாக பைப்ரோமியால்ஜியா என்ற ஒரு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு வருகிறாராம். இந்த நோயின் தாக்கம் மிகவும் தீவிரமடைந்து விட்டதாம். இது ஒரு தசை அழற்ஜி நோயாகும். தசை வலியால் அவதிப்படுவார்களாம். ஒரு சாதாரண வேலையை கூட செய்ய மிகவும் சிரமப்படுவாராம்.

nan3

nan3

உடற்பயிற்சி செய்தாலும் அவரால் செய்ய இயலாதாம். அவ்வப்பொழுது உடல் எடை கூடுமாம், குறையுமாம். சில நேரங்களில் நகர்வதற்குக் கூட மிகவும் கஷ்டப்படுவாராம். இன்னும் தீவிரமானால் நினைவாற்றலை கூட இழக்க நேரிடுமாம்.இதையெல்லாம் தாண்டித்தான் இந்தப் படத்திற்காக மிகவும் உழைத்திருக்கிறேன் என்று நந்திதா கூறினார்.

இதையும் படிங்க : பெண்கள், ஆண்களை ஏமாற்றிய ப்ளேபாய் – விக்ரமன் பற்றி பத்திரிக்கையாளர் ஆவேசப்பேட்டி

Next Story