
Cinema News
நடிகை நயன்தாராவின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா ??
பிறப்பு: நவம்பர் 18, 1984; இயற்பெயர் -டயானா மரியா குரியன்
2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார்.
இவர் தமிழ் சினிமாவில் 2010 களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வருகிறது.
மேலும், நயன்தாரா கைவசம் தற்போது கனெக்ட், காட் பாதர், அட்லீயின் இயக்கத்தில் ஒரு படம் உள்ளது.

சொத்து மதிப்பு:
நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு குறித்து இணையத்தில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 60 – 70 கோடி இருக்கும் என தெரிவிக்கின்றனர்.
இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. ஆனால், பெரிதும் திரை வட்டாரத்தில் கூறப்படுவது இவை தான்.