Categories: latest news

இரு பக்கமும் பணத்தால் வந்த இடி!… நயன்தாரா திடீரென பொங்கியதற்கு இதுதான் காரணமா?!…

நயன்தாராவுக்கு பணத்தால் நெருக்கடி வந்த காரணத்தால் திடீரென்று இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருப்பதாக கூறப்படுகின்றது.

கோலிவுட் சினிமாவில் தற்போது ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருப்பது நடிகை நயன்தாராவின் அறிக்கை தான். தனுஷுக்கு எதிராக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையானது தற்போது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்து இருக்கின்றது. கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் நானும் ரவுடிதான்.

இந்த திரைப்படத்தை நடிகர் தனுஷ் தயாரித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதுதான் நயன்தாராவுக்கும் விக்னேஷ் இவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதன் பிறகு இருவரும் 2022 ஆம் ஆண்டு சென்னை மகாபலிபுரத்தில் மிகப்பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள்.

இதையும் படிங்க: Dhanush: அப்பாடா.. தனுஷுக்கு ஆதரவாக இறங்கிய நடிகை! கண்மூடித்தனமா எதையும் நம்பாதீங்க பாஸ்

இவர்களின் திருமணம் தொடர்பான வீடியோ ஆவண படமாக netflix தளத்தில் வெளியாக இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக இந்த ஆவணப்படம் வெளியாகவே இல்லை. வரும் நவம்பர் 18ஆம் தேதி நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு netflix ஓடிடியில் வெளியாக இருக்கின்றது.

இந்த ஆவண படத்தில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான நானும் ரவடி தான் படத்தின் பாடல் காட்சிகள் பயன்படுத்தியிருந்தார்கள். அதனை பயன்படுத்தியதற்காக தனுஷ் பத்து கோடி கேட்டதாக நடிகை நயன்தாரா இன்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கை தான் தற்போது வைரலாகி வருகின்றது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே நடக்கும் பிரச்சனை வெளியில் வந்திருக்கின்றது.

கடந்த 2 வருடங்களாக இந்த ஆவணப்படத்திற்கு நானும் ரவுடிதான் படத்தில் இருக்கும் பாடலை பயன்படுத்துவதற்கு என்ஓசி கேட்டு வரும் நிலையில் நடிகர் தனுஷ் அதனை கொடுக்காமல் இருந்து வந்திருக்கின்றார். அதையும் மீறி ட்ரைலர் வீடியோவில் நானும் ரவுடி தான் படத்தின் மூன்று வினாடி வீடியோவை பயன்படுத்தியதற்காக நடிகர் தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு இருக்கின்றார்.

இது ஒரு புறம் இருக்க இந்த ஆவண படத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக netflix தயாரித்து வரும் நிலையில் நயன்தாராவுக்கு மிகப்பெரிய தொகையை இந்த நிறுவனம் கொடுத்து இருக்கின்றது. தற்போது இந்த ஆவணப்படம் வெளியாகவில்லை என்றால் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் நயன்தாராவுக்கு கொடுத்த தொகையை திரும்ப கொடுங்கள் என்று கேட்பார்கள்.

இதையும் படிங்க: தனுஷிடம் மன்னிப்பு கேட்ட நடிகை நயன்தாரா…! அதுவும் எதுக்காக தெரியுமா?… வைரலாகும் வீடியோ…!

இப்படி இரண்டு புறமும் இருந்து பணத்தால் நடிகை நயன்தாராவுக்கு நெருக்கடி வந்த காரணத்தால் தான் திடீரென்று பொங்கி இப்படி மூன்று பக்கத்திற்கு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றார். இந்த அறிக்கையில் நடிகர் தனுஷ் குறித்து மிகவும் காட்டமாக பேசி இருக்கின்றார். இந்த பதிவுக்கு நடிகர் தனுஷ் பதிலளிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ramya suresh

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

33 minutes ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

1 hour ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

2 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

3 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

9 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

10 hours ago