நல்லவேளை கலர்ல போடல!.. தலைவி வேறலெவல்!.. பில்லா பட எபெஃக்ட் காட்டும் நயன்தாரா...

by சிவா |
nayan
X

Nayanthara: தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ஐயா படம் மூலம் அறிமுகமாகி சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் கூட நடித்தார். சில படங்களில் ஒரு பாடலுக்கு கூட நடனமாடினார். பில்லா படத்தில் பிகினி உடையில் அசத்தல் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்க வைத்தார்.

nayanthara

வில்லு படத்தில் அவர் காட்டிய கவர்ச்சியில் ரசிகர்கள் சொக்கி போனார்கள். ஒருகட்டத்தில் நம்பர் ஒன் நடிகையாக மாறியதோடு, லேடி சூப்பர்ஸ்டாராகவும் மாறினார். அதோடு, ஒருபக்கம் முன்னணி நடிகர்களுடன் டூயட் மறுபக்கம் மாயா, அறம் போன்ற படங்களில் அவரே கதாநாயகியாக நடிக்க துவங்கினார்.

nayanthara

அதன்பின் நெற்றிக்கண் போன்ற பல படங்களிலும் சோலோ பர்பாமன்ஸ் செய்தார். சில மாதங்களுக்கு முன்பு கூட அன்னப்பூரணி என்கிற படம் வெளியானது. இந்த படத்தில் சமையல் கலைஞராக அசத்தி இருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற ஒரு வசனத்தால் சர்ச்சையிலும் சிக்கி மன்னிப்பு கேட்டார்.

nayanthara

இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். அதோடு, வாடகைத்தாய் மூலம் 2 குழந்தைகளுக்கும் தாயானார். சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பது, ஒரு படத்தை வாங்கி வெளியிடுவது, மாற்ற புதுப்புது தொழில்களிலும் முதலீடு செய்வது என கலக்கி வருகிறார்.

nayanthara

அடிக்கடி தனது குழந்தைகள் மற்றும் கணவரோடு நேரம் செலவழிக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தீடிரென கவர்ச்சி உடையில் அழகை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்திருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் பில்லா பட லுக்கில் தலைவி வேற லெவல் என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

nayanthara

Next Story